வருங்காலத்தில் வாணி போஜன் பெரிய நடிகையாக வருவார்.. இயக்குனர் ராதா மோகன்!

சென்னை: வைபவ், வாணி போஜன், எம் எஸ் பாஸ்கர், கருணாகரன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் மலேஷியா டூ அம்னீஷியா.

இந்த படத்தை ராதா மோகன் இயக்கியுள்ளார். பிரேம்ஜி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த திரைப்படம் குறித்து படத்தின் இயக்குனர் க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

புது ட்ராக்கில்

புது ட்ராக்கில்

இயக்குனர் ராதா மோகன் அபியும் நானும், மொழி போன்ற அழகான படங்களை இயக்கியவர். இந்த கொரோனா நோய் தொற்று காலத்தில் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில் முழுக்க முழுக்க ஒரு காமெடி படமாக புது ட்ராக்கில் இயக்கியுள்ளார் ராதா மோகன்.

2ம் அலை எதிர்பார்க்கவில்லை

2ம் அலை எதிர்பார்க்கவில்லை

இந்த படத்திற்கான கதையை கடந்த வருடமே தயார் செய்து வைத்ததாகவும். ரிலிஸ் செய்யும் வேளையில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இவ்வளவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார். இந்த படம் நேரடியாக Zee5 OTT தளத்தில் வெளியாகியுள்ளது.

ஆடை வடிவமைப்பு

ஆடை வடிவமைப்பு

இந்த படத்தின் நாயகி வாணிபோஜன் குறித்து பேசிய இயக்குனர் ராதா மோகன், படத்தில் வரும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல ஆடை வடிவமைப்பை வாணி போஜனே பார்த்து தேர்வு செய்து நடித்ததாக கூறியுள்ளார்.

முக்கிய காட்சி

முக்கிய காட்சி

இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சியில் கணவனுடன் உரையாடும் போது ஒரு தேர்ந்த நடிகை போல் எதார்த்தமாக தன் பங்கை சிறப்பாக செய்து நடித்திருப்பார் வாணி போஜன். அது குறித்து பேசிய இயக்குனர் ராதா மோகன் வருங்காலத்தில் வாணி போஜன் பெரிய நடிகையாக வருவார் என உறுதியளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X