அக்‌ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’ படத்தில் இவர் தான் ஹீரோயினாம்.. டிரெண்டாகும் #VaaniKapoor

மும்பை: ஒரு படத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர் அக்‌ஷய் குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகராகவும் வெற்றி நாயகனாகவும் வலம் வருகிறார் நடிகர் அக்‌ஷய் குமார்.

அவர் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள 'பெல்பாட்டம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை வாணி கபூர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

சாத்தான்குளம் வழக்கில் அதிரடி.. சிபிசிஐடிக்கு ஹைகோர்ட் மதுரை கிளை பாராட்டு

லக்‌ஷ்மி பாம்

லக்‌ஷ்மி பாம்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகி உள்ள காஞ்சனா படத்தின் இந்தி ரிமேக்கான லக்‌ஷ்மி பாம் திரைப்படம் தியேட்டரில் வெளியாகாமால், நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கோலிவுட் நாயகர்கள் தியேட்டர் திறப்புக்கு காத்திருக்கும் நிலையில், அக்‌ஷய் குமாரின் இந்த அதிரடி முடிவை திரையுலகத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

தனுஷ் உடன்

தனுஷ் உடன்

இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், சாரா அலி கான் நடிப்பில் உருவாகவுள்ள அட்ரங்கி ரே படத்தில் நடிக்க அக்‌ஷய் குமாருக்கு 100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. லாக்டவுனுக்கு முன்னதாக வாரணாசியில் அந்த படத்திற்கான பூஜை போடப்பட்ட நிலையில், தற்போது அக்‌ஷய் குமாரின் அடுத்த பட அப்டேட்டும் வெளியாகி இருக்கிறது.

தியேட்டரிலா ஆன்லைனிலா

தியேட்டரிலா ஆன்லைனிலா

அக்‌ஷய் குமார், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன், கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகி உள்ள காப் ஸ்டோரியான சூர்யவன்ஷி திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தியேட்டர்கள் திடீரென லாக்டவுன் காரணமாக மூடப்பட்டதால், அந்த படத்தின் ரிலீசும் தாமதமாகி வருகிறது. லக்‌ஷ்மி பாம் ஆன்லைனில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், சூர்யவன்ஷி தியேட்டரில் வெளியாகுமா? இல்லை OTT தளத்திலேயே வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

பெல்பாட்டம்

பெல்பாட்டம்

இந்நிலையில், பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அக்‌ஷய் குமார் நடிக்க உள்ள ‘பெல்பாட்டம்' படம் குறித்த அதிரடி அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. நடிகை வாணி கபூர் இந்த படத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக ஒப்பந்தம் ஆகியுள்ள இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, #VaaniKapoor என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

ஆஹா கல்யாணம் ஹீரோயின்

ஆஹா கல்யாணம் ஹீரோயின்

இயக்குநர் கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியான ‘ஆஹா கல்யாணம்' படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் அறிமுகமானவர் நடிகை வாணி கபூர். தொடர்ந்து ரன்வீர் சிங்கின் Befikre, கடந்த ஆண்டு ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான வார் உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன கதை

என்ன கதை

'பெல்பாட்டம்' என்ற டைட்டிலேயே இந்த படம் ஒரு 80களில் நடக்கும் ரெட்ரோ கதை என்பதை விளக்குகிறது. இயக்குநர் ரஞ்சித் திவாரி இயக்கத்தில் மறக்கப்பட்ட ஒரு ஹீரோவை பற்றிய த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாக உள்ளது. அன்லாக்டவுன் 2.0 ஆரம்பித்துள்ள நிலையில், விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X