வாத்தியாக பட்டையை கிளப்பிய தனுஷ்.. வாத்தி படத்தின் முதல் நாள் வசூல் விவரம்!
சென்னை : தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியில் நேற்று வெளியான வாத்தி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சினேகா கீதம், மிஸ்டர் மஜ்னு, ரங் தே, தோலி பிரேமா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கி அட்லூரி முதன் முறையாக தனுசை வைத்து வாத்தி என்ற படத்தை இயக்கி உள்ளார்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியில் ஒரே நேரத்தில் வெளியாகி கலவையான நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

தனுஷின் வாத்தி
சிவகாத்திகேயனின் பிரின்ஸ், விஜய்யின் வாரிசு படங்களைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநரின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் 'சார்' என்றும் தலைப்புவைக்கப்பட்டுள்ளது. இதில், சம்யுக்த்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜிபி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வழக்கமான கதை
தனியார் பள்ளி ஒற்றில் ஆசிரியராக இருக்கும் தனுசை தொலைதூரத்தில் இருக்கும் கிராம பள்ளி ஒன்றுக்கு அனுப்பி அரசின் உத்தரவின் பேரில் அனுப்பி வைக்கிறார் பள்ளியின் உரிமையாளர் சமுத்திரக்கனி. அந்தக் கிராமத்தில் 11வகுப்பு 12ம் வகுப்பு மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு வேலை செய்துவருவதை அதிர்ச்சி அடைந்த தனுஷ் அவர்களுக்கு பாடம் குறித்து அரசுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற செய்கிறார்.

தனுஷ் தான் ஆறுதல்
இதனால்,சமுத்திரக்கனிக்கும் தனுஷூக்கும் மோதல் ஏற்பட்டு, இதனால், தனுஷூக்கு பலவிதமான தொல்லைக்கள் கொடுத்து அந்த பள்ளியில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்கிறார் சமுத்திரக்கனி அதன் பின் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை, சமுத்திரக்கனி நடித்த சாட்டை,ஜோதிகா நடித்த ராட்சசி என இதே போன்று பல திரைப்படங்களை பார்த்து பார்த்து சலித்துப்போன நமக்கு தனுஷின் நடிப்பு ஆறுதலாக உள்ளது.

வாத்தி முதல் நாள் வசூல்
நேற்று திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் முதல் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு 8 கோடியும், தெலுங்கில் 3 கோடியும், கர்நாடகாவில் 1.5 கோடியும் வெளிநாடுகளில் 1.5 கோடி என ஆக மொத்தம் உலகளவில் 14 கோடி வசூலாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றும் நாளையும் வாரவிடுமுறை என்பதால், வாத்தி படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











