இன்று வரை மாஸ்காட்டும் வாத்தி கம்மிங்...100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை !
சென்னை : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் , சாந்தனு, அர்ஜூன் தாஸ் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல், பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி அனைவரையும் ஆடவைத்துள்ளது.
வெளியானது முதல் இன்று வரை வைரலாக உள்ள இந்த வாத்தி கம்மிங் பாடல் தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

மாஸ்ஸான படம்
கொரோனா அச்சம் காரணம் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், ஊரடங்குக்குப் பிறகு வெளியான மாஸ்ஸான படம் என்ற பெருமை மாஸ்டர் படத்திற்கு , இருப்பினும் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர அனுமதிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

200கோடி வசூல்
தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் திரைப்படம் வெளியான 10 நாட்களிலேயே உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.

டிரெண்டிங் சாங்
இத்திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது என்றால், படம் வெளியாகி பல மாதங்கள் ஆனது என்றாலும், வாத்தி கம்மிங் பாடல் இன்று வரை டிரெண்டிங்கில் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்பாடலுக்கு நடனமாடி இப்பாடலை மேலும் பிரபலமாக்கி வருகின்றனர்.

100 மில்லியன் பார்வையாளர்கள்
தற்போது மேலும் ஒரு சாதனையை வாத்தி கம்மிங் பாடல் படைத்துள்ளது. இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வாத்தி கம்மிங் லிரிக்கல் வீடியோவும் 125 மில்லியனை நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











