தல பிறந்தநாளில் டிரெண்டாகும் தளபதி பாடல்.. 2 மில்லியன் லைக்குகளை கடந்து வாத்தி கம்மிங் சாதனை!

சென்னை: தல அஜித்தின் 50வது பிறந்தநாளான இன்று தளபதி ரசிகர்களும் சமூக வலைதளத்தில் ஹாஷ்டேக் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடல் 2 மில்லியன் லைக்குகளை அள்ளி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், #VaathiComing என்ற ஹாஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

வாத்தி கம்மிங்

வாத்தி கம்மிங்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம் மாஸ்டர். அந்த படத்தில் அனிருத் இசையில் வெளியான வாத்தி கம்மிங் பாடல் உலகம் முழுவதிலும் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

150 மில்லியன் வியூஸ்

150 மில்லியன் வியூஸ்

கடந்த ஜனவரி 27ம் தேதி யூடியூப் தளத்தில் வாத்தி கம்மிங் வீடியோ பாடல் வெளியான நிலையில், சமீபத்தில் 150 மில்லியன் வியூக்களை அந்த பாடல் கடந்து சாதனை படைத்ததை தளபதி ரசிகர்கள் ஹாஷ்டேக் போட்டு டிரெண்ட் செய்து கொண்டாடினர். இந்நிலையில், வாத்தி கம்மிங் பாடலை கொண்டாட மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

2 மில்லியன் லைக்ஸ்

2 மில்லியன் லைக்ஸ்

வாத்தி கம்மிங் வீடியோ பாடல் சுமார் 2 மில்லியன் லைக்குகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. நடிகர் விஜய்யின் பிகில் மற்றும் மாஸ்டர் பட டீசர்கள் மட்டுமே 2 மில்லியன் லைக்குகளை கடந்துள்ள நிலையில், வாத்தி கம்மிங் பாடல் வீடியோ முதன்முறையாக 2 மில்லியன் லைக்குகளை கடந்துள்ளது தளபதி ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

Recommended Video

VAATHI COMING Sets New Record | Lokesh Kanagaraj, Thalapathy Vijay, Anirudh
மஜா பண்ணும் ரசிகர்கள்

மஜா பண்ணும் ரசிகர்கள்

தல அஜித்தின் பிறந்தநாள் அன்று தளபதி ரசிகர்களும் சமூக வலைதளங்களை ஆட்சி செய்ய கிடைத்துள்ள அரிய வாய்ப்பாகவே வாத்தி கம்மிங் 2 மில்லியன் வியூக்களை கடந்துள்ளதை பார்த்து வருகின்றனர். #VaathiComing என்ற ஹாஷ்டேக்கையும் ஃபேன் மேட் 2 மில்லியன் போஸ்டர்களையும் போட்டு விஜய் ரசிகர்கள் மஜாவாக இந்த சாதனையை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X