Wimbledon வரை சென்ற வாத்தி கம்மிங்.. ரியல் வெறித்தனம்.. விஜய் படம்னாலே கெத்து தானே பாஸ்!

சென்னை: கொரோனாவுக்கு பிறகு மீண்டும் மக்களை எப்படி தியேட்டருக்கு வரவழைக்கப் போகிறோம் என ஹாலிவுட்டின் ஜேம்ஸ் பாண்ட் முதல் நம்ம ஊரின் ஆர்.ஆர்.அர், கேஜிஎஃப் எல்லாம் பயந்து நின்ற நேரத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் மாஸாக நடிகர் விஜய் மக்களை தியேட்டருக்கு வரவழைத்து இருந்தார்.

Recommended Video

Wimbledon வரை சென்ற Vaathi Coming, Pan World Hitl! *Kollywood | Filmibeat Tamil

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் மாஸ்டர் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது.

அந்த படத்தில் அனிருத் இசையமைத்த ஓப்பனிங் பாடலான வாத்தி கம்மிங் வரிகளை தற்போது விம்பிள்டன் டென்னிஸின் அதிகார ட்விட்டர் பக்கத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

பான் வேர்ல்ட் ஹிட்

பான் வேர்ல்ட் ஹிட்

விஜய்யின் பாடல்கள் வெளியானாலே அவை பான் வேர்ல்ட் ஹிட் ஆகி வருகின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி மற்றும் வாத்தி கம்மிங் பாடல்கள் உலகளவில் ஹிட் அடித்தன. பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலும் பான் வேர்ல்ட் ஹிட் தான். உலகின் பல நாடுகளில் இருந்தும் வாத்தி கம்மிங் பாடலுக்கு ரீல்கள் வெளியாகி இணையத்தை அதிர வைத்தன.

விஜய்யின் வெறித்தனமான ஆட்டம்

விஜய்யின் வெறித்தனமான ஆட்டம்

சோபாவில் தூங்கிக் கொண்டிருக்கும் விஜய்யை மாணவர்கள் வீட்டுக்கே சென்று எழுப்பி கல்லூரி விழாவுக்கு அழைத்து வரும் போது அமைக்கப்பட்ட வாத்தி கம்மிங் பாடலுக்கு, நடிகர் விஜய் வெறித்தனமான ஆட்டத்தை போட்டிருப்பார். விஜய்யின் ரியல் நண்பர்களான சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்ட சில நடிகர்களும், ஆண்ட்ரியாவும் விஜய்யுடன் சேர்ந்து அந்த பாட்டுக்கு ஆட்டம் போட்டிருப்பார்கள்.

விம்பிள்டனில் வாத்தி கம்மிங்

விம்பிள்டனில் வாத்தி கம்மிங்

இந்நிலையில், வாத்தி கம்மிங் பாடல் வரிகளை விம்பிள்டன் டென்னிஸ் அமைப்பின் அதிகார ஃபேஸ்புக் பக்கத்திலேயே டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரரின் வருகைக்கு பயன்படுத்தி உள்ளனர். இதனை கண்டதும் விஜய் ரசிகர்கள் நடிகர் விஜய்யின் உலகளவிலான ரீச்சை பார்த்து கொண்டாடி வருகின்றனர். மீண்டும் வாத்தி கம்மிங் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து தெறிக்கவிட்டு வருகின்றனர்.

வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்

வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்

மாஸ்டர், பீஸ்ட் படங்களை தொடர்ந்து அடுத்ததாக வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். தமன் இசையில் அட்டகாசமான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலும் ரெடியாகி விட்டதாம். விரைவில் அந்த பாடலின் லிரிக் வீடியோவை வெளியிட ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். வாரிசு பாடலும் அதே வைபை உலக ரசிகர்களுக்கு கொடுக்குமா/ என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X