சாரி பாஸ் அது வேற வாய்... இடஒதுக்கீடு சர்ச்சையில் ரிவர்ஸ் கியர் போட்ட வாத்தி இயக்குநர்!
சென்னை: தனுஷின் வாத்தி திரைப்படம் கடந்த 17ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழில் வாத்தி, தெலுங்கில் சார் என்ற டைட்டிலில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
வாத்தி ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசியிருந்த வெங்கி அட்லூரி, இடஒதுக்கீடு குறித்து சர்ச்சையான முறையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வாத்தி சக்சஸ் மீட்டில் பேசியுள்ள அவர் தனது இடஒதுக்கீடு சர்ச்சை குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

வசூலில் கலக்கிய தனுஷின் வாத்தி
தனுஷின் வாத்தி கடந்த 17ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸானது. தமிழில் வாத்தி, தெலுங்கில் சார் என்ற டைட்டிலில் வெளியான இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனாலும் வசூலில் தொடர்ந்து நல்ல ஓப்பனிங் கிடைத்த வாத்தி திரைப்படம் இதுவரை 75 கோடிக்கும் மேல் கலெக்ஷன் செய்துள்ளது. தனுஷுடன் சம்யுக்தா, சமுத்திரகனி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி?
கலவையான விமர்சனங்கள் கிடைத்தும் வாத்தி படத்தின் வசூல் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் என்றே சொல்லப்படுகிறது. முதல் நாளில் உலகம் முழுவதும் 12 முதல் 14 கோடி வரை வசூலித்த வாத்தி, முதல் வாரத்தில் 35 கோடி ரூபாய் வசூலித்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில், இதுவரை 75 கோடி வசூலித்த வாத்தி விரைவில் 100 கோடி கலெக்ஷனில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறாது. கடந்தாண்டு வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் 100 கோடி கலெக்ஷன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இடஒதுக்கீடு சர்ச்சை
முன்னதாக வாத்தி இசை வெளியீட்டு விழாவில், தனுஷும் இயக்குநர் வெங்கி அட்லூரியும் பேசியது சர்ச்சையானது. பள்ளியில் படிக்கும்போது நடந்த சில சம்பவங்களை வாத்தி இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியிருந்தார். அதற்கு பல தரப்புகளில் இருந்து கண்டனம் வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், இடஒதுக்கீடு குறித்து சர்ச்சையான கருத்தை கூறியிருந்தார் வெங்கி அட்லூரி. தான் அமைச்சரானால் சாதி ரீதியாக இல்லாமல் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பேன் எனக் கூறினார். அவரின் இந்த கருத்து கடும் சர்ச்சையானது.

வெங்கி அட்லூரி விளக்கம்
இடஒதுக்கீடு பற்றிய கருத்து சர்ச்சையானதால், வாத்தி படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய வெங்கி அட்லூரி அதற்கான விளக்கம் கொடுத்துள்ளார். அதில், தனது பார்வையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும். இந்தியாவில் கல்வி சிறப்பாக இருந்தாலும், அதற்கான விலை இங்கே அதிகமாக உள்ளது. வட இந்தியாவில் உள்ள பள்ளிகளை அதிகம் பார்த்ததில்லை. தென்னிந்தியாவில் தான் தனக்கு ஆர்வம் உண்டு. தமிழ்நாட்டைப் பற்றி அதிகம் தெரியாத எனக்கு, இங்குள்ள இடஒதுக்கீடு பற்றியும் அதன் சூழல் பற்றியும் புரியவில்லை எனக் கூறியுள்ளார்.

அதிகம் பேச விரும்பவில்லை
மேலும், இடஒதுக்கீடு பற்றிய தனது கருத்து சர்ச்சையானது. நான் அதுகுறித்து அதிகம் பேச விரும்பவில்லை. இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களையும் கவனத்தில் வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். கல்வி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் என் கருத்து. அதுதான் இந்தியாவின் வளர்ச்சி, சமுதாயத்தின் வளர்ச்சி, அதனால் தான் அப்படி பேசியதாக தெரிவித்துள்ளார்.

தனுஷுக்கு மிகப்பெரிய நன்றி
தொடர்ந்து பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி, தனுஷுடன் நாம் சரியாக வேலை செய்ய வேண்டும். பார்த்துக்கலாம் என்பதற்கெல்லாம் இடமே இல்லை. தனுஷ் என்னை ஒரு நல்ல இயக்குநராக உருவாக்கியுள்ளார். நல்ல நடிகர், தொழில்நுட்பக் கலைஞருடன் பணிபுரியும்போது, நாமும் இணைந்து நல்ல கலைஞராக மாறுவோம். என்மீது நம்பிக்கை வைத்த தனுஷூக்கு நன்றி. இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றிய எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி எனக் கூறியுள்ளார். தமிழ்நாடு குறித்து தெரியாமல் இடஒதுக்கீடு பற்றி பேசிவிட்டு இப்போது விளக்கம் கொடுத்துள்ள வெங்கி அட்லூரிக்கு, இதனை முதலிலேயே தெரிந்து பேசியிருக்கலாம் என அட்வைஸ் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











