நான் கல்வி அமைச்சரானால்.. வாத்தி பட இயக்குநரின் சர்ச்சை பேச்சு.. கடுப்பான நெட்டிசன்ஸ்!

சென்னை : வாத்தி திரைப்பட இயக்குநர் வெங்கி அட்லூரியின் சர்ச்சைக்குரிய பேச்சால் நெட்டிசன்ஸ் கடுப்பாகி உள்ளனர்.

தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள, படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வாத்தி

வாத்தி

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படத்தில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ். வாத்தி படத்தில் ஆசிரியராக நடித்து பட்டையை கிளப்பி உள்ளார். தனுஷ் நடிக்கும் நேரடியான தெலுங்கு திரைப்படம் இதுவாகும். தெலுங்கில் இப்படத்திற்கு 'சார்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கல்வி வியாபாரமா?

கல்வி வியாபாரமா?

படம் 90களின் காலகட்டத்தில் நடப்பது போல காட்டப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையும், கல்வி வியாபாரமாகி வருவதையும் இப்படம் விரிவாக எடுத்துக்கூறி உள்ளது. ஜிவி பிரகாஷின் அட்டகாசமான இசையில் 'ஒருதல காதலை தந்த' பாடல் படம் வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டது.

இயக்குநர் வெங்கி அட்லூரி

இயக்குநர் வெங்கி அட்லூரி

இந்நிலையில், வாத்தி திரைப்படத்தின் ப்ரோமோஷன் பட ரிலீசுக்கு முன்பு படு ஜோராக நடைபெற்றது. படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் தொகுப்பாளர், நீங்கள் மத்திய கல்வியமைச்சரானால் முதலில் உங்கள் பணி என்னவாக இருக்கும் என்று கேட்டுள்ளார்.

சர்ச்சை பதில்

சர்ச்சை பதில்

அதற்கு பதிலளித்த வெங்கி, என்னுடைய பதில் சர்ச்சையாக இருக்கலாம். ஆனால், நான் கல்வி அமைச்சரானால், தற்போது இருக்கும் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து அறிவிப்பேன். அதற்கு பதிலாக பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவேன் என்று பதில் அளித்துள்ளார். இவரின் இந்த பதில் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

கடுப்பான நெட்டிசன்ஸ்

கடுப்பான நெட்டிசன்ஸ்

இயக்குநரின் பதிலால் கடுப்பான நெட்டிசன்ஸ், சாதி ரீதியான இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், உயர வேண்டும் என்பதற்கு கொண்டு வந்தது. கல்வி முறையைப் பற்றி திரைப்படம் எடுப்பதற்கு முன், நீங்கள் சில விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். அம்பேத்கரை படியுங்கள் என நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X