பெயருக்கு பின்னால் எதுக்கு சாதி பெயர்.. வாத்தி பட நடிகையின் அதிரடி முடிவு!

சென்னை : பெயருக்கு பின்னால் எதுக்கு சாதி பெயர் என வாத்தி பட நடிகை சம்யுத்தா அதிரடியான பேச்சுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன .

நடிகை சம்யுக்தா மலையாளத்தில் பாப்கார்ன் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து தமிழில் களரி படத்தில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் ஜூலை காற்றில், லில்லி, தீவண்டி, கல்கி, உயரே, வெல்லம் தி எசேன்ஷியல் டிரிங்க், ஆணும் பெண்ணும், பீம்லா நாயக், கடுவா, பிம்பிசாரா என பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சம்யுக்தா

நடிகை சம்யுக்தா

நடிகை சம்யுக்தா தற்போது தனுஷூடன் இணைந்து வாத்தி படத்தில் நடித்துள்ளார். இதில், சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்ய இனைந்து தயாரிக்க, வெங்கி அத்லூரி இயக்கியுள்ளார். ஜி வி பிரகாஷ் இசையில் அனைத்துப் பாடல்களும் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது.

பிப்ரவரி 17ந் தேதி ரிலீஸ்

பிப்ரவரி 17ந் தேதி ரிலீஸ்

இப்படம் வரும் பிப்ரவரி 17ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ், இயக்குநர் வெங்கி அத்லூரி, சம்யுத்தா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய தனுஷ், எந்தச் சூழ்நிலையிலும் படிப்பு மிகவும் அவசியமானது ஒன்று, படிப்பில் கவனம் செலுத்துங்கள். அதுதான் உங்களைக் காப்பாற்றும், என் காரை பின் தொடர்ந்து வராதீர்கள், அதை நான் எப்போதும் ஊக்குவிக்க மாட்டேன் என்றார்.

கல்வியில் மாற்றம் தேவை

கல்வியில் மாற்றம் தேவை

வாத்தி படம் பிப்ரவரி 17ந் தேதி வெளியாக உள்ளதால், படத்தின் ப்ரோமோஷன் படு ஜோராக நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனன், 1990 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சொல்லும் படமாக இப்படம் இருக்கும். கல்வியில் மாற்றத்தைக் கொண்டு வர போராடும் ஆசிரியராக நானும், தனுஷூம் நடித்துள்ளோம் என்றார்.

பெயருக்கு பின்னால் எதுக்கு சாதி பெயர்

பெயருக்கு பின்னால் எதுக்கு சாதி பெயர்

தொடர்ந்து பேசிய சம்யுக்தா, நான் பாலாக்காட்டை சேர்ந்த பெண் என்றாலும், தமிழில் நன்றாக பேசுவேன். அதுமட்டுமில்லாமல் தமிழ் எனக்கு பிடித்தமான மொழி ஆகும். பெயருக்கு பின்னால் உள்ள சாதி அடையாளத்தை போட்டுக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் வாத்தி உள்ளிட்ட எந்த படத்திலும் என் பெயருக்கு பின்னால் மேனன் என்பது இருக்காது. ஏற்கனவே அதை நீக்க சொல்லிவிட்டேன். பத்திரிக்கையாளர்களும் என்னை அப்படி அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசினார். சம்யுக்தாவின் இந்த அதிரடியான முடிவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X