தனுஷின் ‘வாத்தி‘ கம்மிங்...முக்கிய தகவலை வெளியிட்ட படக்குழு..குஷியில் ரசிகர்கள் !
சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வாத்தி திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு, பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட், என நடித்து அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார்
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தனுஷ்.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், அட்ராங்கிரே, மாறன் என ஓடிடியில் வெளியான மூன்று திரைப்படங்களும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தன. இதனால், தனுஷ் தன் கைவசம் உள்ள அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்துவது மட்டும் இன்றி, வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

வாத்தி
அந்த வகையில் தனுஷ் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் வாத்தி என்ற படத்தில் நடத்து வருகிறார். இத்திரைப்படத்தை வெங்கட் அட்லுரி இயக்க, தனுஷூக்கு ஜோடியாக சம்யுக்த்தா நடித்து வருகிறார். மேலும், சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

விரைவில் ரிலீஸ் தேதி
இப்படத்திற்கு தமிழில் வாத்தி என்றும் தெலுகில் சார் என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷ் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். வாத்தி படத்தை நாக வம்சில்ஸ் மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டபுள் சர்ப்ரைஸ்
இந்த நிலையில், வாத்தி திரைப்படம் குறித்த முக்கியமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது தனுஷின் பிறந்த நாள் ஜூலை 28ந் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, ஜூலை 27ம் தேதி வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், ஜூலை 28-ஆம் தேதி வாத்தி படத்தின் டீசரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ் வர உள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

திருச்சிற்றம்பலம்
மேலும், தனுஷ் நடிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா , பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications