Vaathi Review: தனுஷின் வாத்தி பாஸ் ஆனதா? ஃபெயில் ஆனதா? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: சிவகார்த்திகேயன், விஜய்யை தொடர்ந்து நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குநர் ஒருவருடன் இணைந்து உருவான வாத்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

திருப்பதியில் நள்ளிரவே வாத்தி படத்தின் ப்ரீமியர் காட்சி வெளியான நிலையில், தியேட்டர்களில் பட்டாசுகளை வெடித்து ரசிகர்கள் கொண்டாடி உள்ளனர்.

தனுஷின் வாத்தி திரைப்படம் கன்ஃபார்மா 8 வாரம் தியேட்டர்களில் ஓடும் என இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியிருந்த நிலையில், இன்று வெளியாகி உள்ள வாத்தி திரைப்படம் பாஸ் ஆனதா இல்லை ஃபெயில் ஆனதா என நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் விமர்சனங்களை இங்கே பார்ப்போம்..

தனுஷின் வாத்தி

தனுஷின் வாத்தி

சிவாஜி படத்தில் வருவதை போல கல்வியை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கும் சமுத்திரகனியை பள்ளி வாத்தியாரான தனுஷ் எப்படி சமாளிக்கிறார் என்பது தான் வாத்தி படத்தின் கதையே.. 1990களில் நடக்கும் கதையாக இந்த வாத்தி படம் விரிகிறது. அரசு பள்ளிகளை மூட முயற்சிக்கும் சமுத்திரகனியின் கனவுக்கு அரசு செக் வைக்க, அந்த பள்ளிகளை தத்தெடுத்து நடத்துவது போல இரண்டாம் தர, மூன்றாம் தர ஆசிரியர்களை அனுப்பி கல்வியை கெடுக்க நினைக்கிறார் சமுத்திரகனி. அப்படியொரு ஆசிரியராக செல்லும் தனுஷ் எப்படி பள்ளியில் மாற்றத்தை கொண்டு வருகிறார் என்பதை கடுப்பை கிளப்பும் வகையில் சொல்லி உள்ளதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

ரொம்ப ஆவரேஜ்

ரொம்ப ஆவரேஜ்

வாத்தி படத்தின் ப்ரீமியர் பார்த்து விட்டேன். முதல் பாதி ரொம்பவே ஆவரேஜ். இரண்டாம் பாதி நல்லா இருக்கு, தனுஷுக்கு இந்த படம் நல்லதொரு தெலுங்கு அறிமுக படமாக அமையும். மசாலா விரும்பிகளுக்கு ஏற்ற விஷயங்கள் நிறையவே இந்த படத்தில் இருப்பதாக இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

விஷுவலா நல்லா இருக்கு

விஷுவலா நல்லா இருக்கு

வாத்தி படத்தின் விஷுவல்ஸ் நல்லாவே இருக்கு.. குறிப்பாக படத்தில் ஸ்வேதா மேனன் குரலில் வரும் பாடல்கள் காதுகளுக்கு இனிமையாக உள்ளது. ஜிவி பிரகாஷின் இசை வாத்தி படத்தை முழுவதுமாக தாங்கிப் பிடிக்கிறது என இந்த ரசிகர் தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

மீனாட்சி டீச்சர் சூப்பர்

மீனாட்சி டீச்சர் சூப்பர்

தனுஷின் வாத்தி படத்தில் மீனாட்சி டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சம்யுக்தாவின் நடிப்பும் அவரது அழகும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. பிரேமம் மலர் டீச்சருக்கு பிறகு ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த மீனாட்சி டீச்சரை பிடிக்கும். படம் கண்டிப்பா பிளாக்பஸ்டர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முதல் பாதி நல்லா எடுத்துருக்கலாம்

முதல் பாதி நல்லா எடுத்துருக்கலாம்

தனுஷின் வாத்தி படத்தின் முதல் பாதியில் தான் பலரும் குறை சொல்லி வருகின்றனர். அதை கொஞ்சம் சரி செய்திருக்கலாம் இயக்குநர் வெங்கி அட்லூரி. இரண்டாம் பாதி மற்றும் தனுஷின் நடிப்பு ஒட்டுமொத்த படத்தையும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி விடுகிறது. வாத்தி படத்துக்கு 2.75 முதல் 3 ரேட்டிங் கொடுக்கலாம் என விமர்சகர் வெங்கி ட்வீட் போட்டுள்ளார்.

8 மணி ஷோவுக்கே ஆள் இல்லை

8 மணி ஷோவுக்கே ஆள் இல்லை

வாத்தி படத்தை திருநெல்வேலி உள்ளிட்ட பல ஊர்களில் அதிகாலை காட்சியாக திரையிடவில்லை என்றும், 8 மணி காட்சிக்கே தியேட்டர் ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை என சிம்பு ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 4 மணிக்கு படம் போட்டாலும், சிம்பு படம் ஹவுஸ்ஃபுல் ஆகும் எங்க கூட மோதாதீங்க என தனுஷ் ரசிகர்களை தியேட்டர் ஸ்க்ரீன் ஷாட்டுகளை போட்டு வெறுப்பேற்றி வருகின்றனர்.

ஜஸ்ட் பாஸ்

ஜஸ்ட் பாஸ்

கல்வியில் நடக்கும் அரசியலை சொல்லப் போறாங்கன்னு நினைத்து படத்துக்கு போனவங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை இந்த வாத்தி அளித்துள்ளது என்றும் அரசு பள்ளிகளை அழிக்க தனியார் பள்ளிகள் செய்யும் சதி போன்ற விஷயங்கள் எல்லாம் செம காமெடியாக உள்ளது. தனுஷின் தரமான நடிப்பு மட்டும் தான் வாத்தி படத்தை காப்பாற்றுகிறது. இந்த வாத்தி ஜஸ்ட் பாஸ் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X