Vaathi Review: வாத்தி படத்தின் முதல் விமர்சனம்.. படம் பட்டைய கிளப்புது.. கன்ஃபார்ம் ஹிட்
சென்னை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் வாத்தி படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் சூப்பர் ஹிட்டானது. இதனால் சில காலங்களாக டல்லாக இருந்த தனுஷ் மீண்டும் உற்சாகமாகியிருக்கிறார். திருச்சிற்றம்பலம் கொடுத்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முடிவெடுத்திருக்கும் தனுஷ் தற்போது வாத்தி படத்தில் நடித்திருக்கிறார்.

பிப்ரவரி 17ல் வெளியாகும் வாத்தி திரைப்படம்
வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருக்கிறார். மேலும் சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான வாத்தி பாடல்களும், ட்ரெய்லரும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கல்வி வணிகமயமாவதை அடிப்படையாக வைத்து படம் உருவாகியிருக்கிறது.

படம் பட்டைய கிளப்புது; வாத்தியின் முதல் விமர்சனம்:
இந்நிலையில் வாத்தி படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியிருக்கிறது. தணிக்கை குழுவில் இடம்பெற்றிருக்கும் உமர் சந்து என்பவர் வாத்தி படத்தை பார்த்திருக்கிறார். அதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அற்புதமான சமூக செய்தியுடன் மற்றொரு பரிசோதனை முயற்சியாக உருவாகியிருப்பது வாத்தி படம்.
தனுஷ் இந்தியாவின் பன்முக திறமையில் கிங்க் என்பதில் சந்தேகமில்லை. அவர் படத்தை ஒட்டுமொத்தமாக ஸ்டீல் செய்துவிட்டார். க்ளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் அற்புதமாக இருக்கிறது"" என குறிப்பிட்டுள்ளார்.

வாத்தி தனுஷால் வெடித்த சர்ச்சை
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது அப்போது பேசிய தனுஷ், "நான் ஒரு டியூஷனில் சேர்ந்தேன். ஆனால் படிப்பதற்காக போகவில்லை. அங்கு எனது கேர்ள் ஃப்ரெண்ட் இருந்தார். அவருடன் நேரம் செலவிடத்திற்காகத்தான் அங்கு போனேன். பத்து நாள்கள்தான் போனேன். ஆனால் அந்த வாத்தியார் என்னையே எழுப்பி எழுப்பி கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். இது வேலைக்கு ஆகாது என டியூஷன் போவதை நிறுத்திவிட்டேன்.
அதன் பிறகு டியூஷனுக்கு வெளியேதான் காத்திருப்பேன். ஆனால் நான் வெளியில் வெயிட் பண்ணுவது அவருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக என் பைக்கின் ஹார்னை எப்போதெல்லாம் அந்தப் பக்கம் போகிறேனோ அடிப்பேன். அதுதான் நான் வந்துவிட்டேன் என உணர்த்துகிற சிக்னல்.

தனுஷ் கூத்தாடாத தெருவே இல்லை
இப்படியே போய்க்கொண்டிருக்க சில நாள்களுக்கு பிறகு ஆசிரியர் கண்டுபிடித்துவிட்டார். ஒருநாள் அவர் டியூஷனில் படிப்பவர்களிடம்; உள்ளே இருக்கும் நீங்கள் எல்லாம் டிகிரி வாங்கி ஆளாகிடுவீங்க. வெளியே இருக்கான் பாருங்க ஒருத்தன் அவன் நடுத்தெருவுல போய் கூத்தாடுவான் என சொல்லியிருக்கிறார். அது இப்போது உண்மையாகிவிட்டது. நான் கூத்தாடாத தெருவே தமிழ்நாட்டில் இன்று இல்லை"" என்றார்.

தனுஷ் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்
தனுஷின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும், மேடை அலங்காரத்துக்காக பேசுவது நன்றாக இருக்கும். ஆனால் மாணவ சமுதாயம் ஏற்கனவே தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சமயத்தில் உச்ச நடிகராக இருந்துகொண்டு தனுஷ் இப்படி பேசியது சரியானது அல்ல எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











