அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் படங்கள்.. ஃபீல் செய்யும் ஃபேன்ஸ்!

சென்னை : சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பது சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.

சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்.

அந்த வகையில் அருவி இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்த வாழ் இப்பொழுது நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என அதிகார பூர்வ தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .

 திரையுலகையே திருப்பிப் போட்ட

திரையுலகையே திருப்பிப் போட்ட

கடந்த 2016ல் வெளியான அருவி ஒட்டுமொத்த திரையுலகையே திருப்பிப் போட்டது. அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி திரைப்படத்தில் நடிகை அதிதி பாலன் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். ஹெச்ஐவி பற்றிய போதுமான விழிப்புணர்வு இன்றளவும் சமூகத்தில் இல்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறிய இந்த படத்திற்கு சர்வதேச அளவில் பல விருதுகளும் அளிக்கப்பட்டிருந்தது.

அடுத்த படத்தை

அடுத்த படத்தை

அருவி படத்தை தொடர்ந்து அருண் பிரபு புருஷோத்தமனின் அடுத்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரிப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி இவர்களது கூட்டணியில் வாழ் உருவாகி உள்ளது. இதில் பிரதீப் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இப்படம் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இப்பொழுது நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

வாழ்

வாழ்

பிரதீப், பானு, திவ்யா, யாத்ரா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சென்ற ஆண்டு வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது . சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சினையை பேசியிருக்கும் வாழ் பிப்ரவரி மாதமே வெளியாக தயாராகி இருந்தது . கொரோனா பரவல் காரணமாக இன்று வரை வெளியாகாமல் இருக்கிறது.

ஜூலை 16ஆம் தேதி

ஜூலை 16ஆம் தேதி

இந்த நிலையில் இப்படத்தை பிரபல ஓடிடி தளமான சோனி லைவ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருக்க வரும் ஜூலை 16ஆம் தேதி நேரடியாக சோனி லைவ்வில் வெளியிடப்படுகிறது என்ற அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு இப்பொழுது வெளியாகியுள்ளது. டாக்டரை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் வாழ் படமும் ஓடிடியில் வெளியாவதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இப்படத்தை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகரை அருண் பிரபு இயக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X