வேற லெவல் விசுவல்ஸ்.. அருவியை ஓவர் டேக் செய்யுமா வாழ்!
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருவி இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழ் டீஸர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான அருவி படம் இந்தியளவில் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றது.
இந்நிலையில், அருண் பிரபுவின் இரண்டாவது படமான வாழ் படத்தின் டீஸர், வேற லெவல் விசுவல்ஸ் கொண்டு உருவாகியுள்ளது.
வாழ் படத்தின் டீஸரை பார்த்த பலரும் டீஸர் குறித்து வாயாற பாராட்டி வருகின்றனர்.
டிரெண்டிங்
வாழ் டீஸர் வெளியான சில நொடிகளிலேயே வாழ் டீஸர் ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. இந்த படத்தின் இயக்குநர் அருண் பிரபு மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அடுத்த ஹிட்
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் கம்பேனி ஆரம்பித்து கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ் என மூன்று படங்களை தயாரித்துள்ளார். கனா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்கள் வெற்றியடைந்துள்ள நிலையில், வாழ் படமும் நிச்சயம் வெற்றி பெறும் என்பது டீஸரை பார்த்தாலே தெரிகிறது.

நீயா நானா
அருவி படத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை வச்சு செய்திருந்த அருண் பிரபு, இந்த படத்தில் நீயா நானாவை கையில் எடுத்துள்ளார். பிரகாஷ் எனும் தனி மனிதன் குறித்து பேசும் அளவுக்கு அந்த நபர் என்ன செய்தார், என்ன பிரச்சனை என டீஸரை பார்த்த ரசிகர்கள் ஆர்வமுடன் படத்தின் ரிலீசுக்கு வெயிட் செய்கின்றனர்.
யார் யார்
வாழ் படத்தில் பிரதீப் ஆண்டனி, டி.ஜே. பானு, ஆரவ், திவா தவான், நித்யா, ஸ்ரீஜா, இன்மொழி, மயூரா, பாபு உள்ளிட்ட புதுமுக நடிகர்கள் நடித்துள்ளனர். அருவி படத்தில் நடித்த பிரதீப் ஆண்டனி இந்த படத்திலும் லீடு ரோல் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











