எனக்கு நல்லா தெரியும்.. வாயை கொடுத்த பிரியங்கா.. நோஸ் கட் செய்த வாழை பட நாயகி நிகிலா விமல்

சென்னை: தனியார் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. அந்த சேனலில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அவர் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார். அந்த சீசனை மணிமேகலை தொகுத்து வழங்கினார். ஆனால் தனது வேலையில் பிரியங்கா அதீதமாக தலையிடுகிறார் என்று சொல்லி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் மணிமேகலை. இந்தச் சம்பவம்தான் கடந்த சில நாட்களாக சின்னத்திரை வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

தமிழ் தொலைக்காட்சிகளில் டாப் 5க்குள் இருக்கும் சேனல்களில் ஒன்று விஜய் டிவி. அதில் தொகுப்பாளராகவோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோ தமிழ்நாடு முழுக்க பிரபலமானவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். சந்தானம், யோகி பாபு, சிவகார்த்திகேயன், கோபிநாத், திவ்ய தர்ஷினி என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். சிவகார்த்திகேயன் இப்போது டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக கோலிவுட்டில் வலம் வந்துகொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

priyanka manimegalai nikila vimal


பிரியங்கா: விஜய் டிவி மூலம் பிரபலமானவர்களில் பிரியங்காவும் ஒருவர். அவர் விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அப்ளாஸை அள்ளியவர். தனது நகைச்சுவைத்தனமான பேச்சாலும், டைமிங் காமெடிகளாலும் நிகழ்ச்சியை போர் அடிக்காமல் நகர்த்தி செல்வார்.

பிக்பாஸ்: விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அவர் பிக்பாஸிலும் கலந்துகொண்டார். அதில் அவர் ஓரளவு நன்றாக விளையாடினாலும் அவரால் டைட்டிலை வெல்ல முடியவில்லை. இருந்தாலும் அவருக்கென்று பலர் ரசிகர்களாக மாறினர். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகும் தனது ஆங்கர் பணியை சிறப்பாக தொடர்ந்துவந்தார் பிரியங்கா.

உருவான பஞ்சாயத்து: ஆனால் கடந்த சில நாட்களாக அவரை சுற்றி ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் அவர் கோமாளியாக பங்கேற்றிருக்கிறார். அந்த நிகழ்ச்சியை மணிமேகலைதான் தொகுத்து வழங்கினார். சூழல் இப்படி இருக்க தனது தொகுப்பாளர் பணியில் பிரியங்கா அதீதமாக தலையிடுகிறார் என்று சொல்லி அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் மணிமேகலை. இந்தச் சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

வலுக்கும் கண்டனங்கள்: நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பது குறித்து மணிமேகலை நீண்ட விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அவரது வீடியோவை பார்த்த பலரும் பிரியங்காவை வறுத்தெடுத்து கண்டனங்கள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி அவர் அப்போதிருந்தே ஓவர் டாமினேட் செய்பவர்தான்; அவரால் பல தொகுப்பாளர்கள் வாழ்க்கையை தொலைத்திருக்கிறார்கள் என்று பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இந்த விவகாரம் குறித்து இதுவரை பிரியங்கா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

நோஸ் கட் செய்த நிகிலா: இந்நிலையில் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது வாழை உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்திருக்கும் நடிகை நிகிலா விமல் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியை பிரியங்காதான் தொகுத்து வழங்கினார். அப்போது நிகிலாவிடம் பிரியங்கா மலையாளத்தில் பேசினார். அவர் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்த நிகிலா விமல்; பிரியங்காவை பார்த்து எனக்கு நன்றாகவே தமிழ் தெரியும்; பிறகு ஏன் மலையாளத்தில் பேசுகிறீர்கள்.

அதுமட்டுமில்லாமல் நீங்கள் பேசும் மலையாளம் புரியவே இல்லை என்று ஒரே போடாக போட்டிருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் வாயை கொடுத்து செம பல்பை பிரியங்கா வாங்கியிருக்கிறாரே. நிகழ்ச்சிக்கு வரும் கெஸ்ட்டுக்கு எந்த மொழி தெரியும் என்றுகூடவா பிரியங்கா க்ரவுண்ட் ஒர்க் செய்யமாட்டார் என்று வறுத்தெடுத்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X