இளைஞர்களை கவரும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம்.. கட்சியில் இணைந்த நடிகர்!

சென்னை: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் தான் வாழை. இத்திரைப்படத்தில் நடித்த நடிகர், விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளார். அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய், பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கினார். இதைத்தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27ந் தேதி விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில், வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், மறுபுறம் அம்பேத்கர், சுதந்திர போராட்டர் வீரர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் கட் அவுட்டிற்கு நடுவே விஜய்யின் கட் அவுட்டும் இருந்தது.

tamilaga vettri kazhagam vaazhai

விஜய்யின் மாநாடு: வழக்கமாக இசைவெளியீட்டு விழாவில் குட்டி கதை சொல்லும் விஜய், மாநாட்டிலும் குட்டி கதையை சொன்னார். அரசியலுக்கு நான் குழந்தை தான், ஆனால் பாம்பை கண்டு எனக்கு பயமில்லை, அரசியல் சினிமாத்துறை இல்லை, அது ஒரு போர்க்களம் கவனமாக களமாடுவோம் என்று பேசி இருந்தார். அவரின் அந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது எனலாம்.

விவசாயிகளுக்கு விருந்து: இதைதொடர்ந்து, கட்சியின் மாநாட்டுக்கு பார்க்கிங் மற்றும் மாநாட்டு திடலுக்காக 230 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் கொடுத்தனர். அவர்கள் அனைவருக்கும் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில் விருந்து வைத்தார். தனது கையால், உணவு பரிமாறினார். இதைத்தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.

கட்சியில் இணைந்தார்: இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் வாழை படத்தில் சிவனைந்தான் கதாபாத்திரத்தில் நடித்த பொன்வேல் இணைந்துள்ளார். தூத்துக்குடி தவெக நிர்வாகிகள் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த அவருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. தமிழக அரசியலில் புதிய மாற்றம் வரவேண்டும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், விஜய்யின் அரசியல் வருகையும், அவரின் அனல் பேச்சும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது எனலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X