கர்ணன் படத்தில் பாண்டியனோட மீனை வெட்டுறாங்க..ரோஷம் இல்லையானு கேட்டாங்க.. மாரி செல்வராஜ்!
சென்னை: மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் வாழை. இப்படத்தில், கலையரசன், நிகிலா விமல், ஜே சதிஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படம் நேற்று தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
வாழைபடத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் இயக்குனர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பார்த்த மணிரத்னம், பாரதிராஜா, பாலா, தனுஷ், சூரி என அனைவரும் மாரிசெல்வராஜுக்கு கண்ணீர் கலந்த முத்தத்தோடு வாழ்த்து தெரிவித்தனர்.

பாண்டியர்களோட மீனை வெட்டுறாங்க: இதுகுறித்து பேட்டி அளித்த மாரி செல்வராஜ், வாழை படம் குறித்தும், நான் இயக்கிய படம் குறித்து மனம் திறந்து பதில் அளித்துள்ளார். அதில்,கர்ணன் படத்தில் பாண்டியர்களோட மீனை வெட்டுறாங்க, மதுரை மக்கள் கொந்தளிக்கவில்லையா என்று கேட்டார்கள். அந்த வீடியோவை பார்த்துவிட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இதற்கு நான் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும், இதை கடந்து செல்ல முடியாது. அந்த படத்தில் தனுஷ் மீனை வெட்டும் போது, அந்த மீனின் மதிப்பு மாறுகிறது. மற்ற படத்தில் இதுபோன்ற காட்சி வரும் போது மாறாத மீனின் மதிப்பு, மாரி செல்வராஜ் படம் எடுக்கும் போது மட்டும் ஏன் மாறுகிறது.
நோக்கம் சரியாக இருக்க வேண்டும்: எனக்கு இது இப்படித்தான் பேச்சு வரும் என்று முன்பே தெரியும், ஏன் என்றால், இதை சொல்லுபவன் யார், செய்து காட்டியவன் யார் என்பதை வைத்து பார்க்கப்படுகிறது. வேறு ஒரு படத்தில், வேறு ஹீரோ இந்த மீனை வெட்டி இருந்தால், அது வேறுவிதமாக எதார்த்தமாக பார்க்கப்பட்டு இருக்கும். இதை நாம் கட்டுக்கொள்ளாமல், நம்ம நோக்கம் சரியாக இருக்கா என்று பார்த்துவிட்டு கடந்து செல்ல வேண்டும்.
நான் பேசக்கூடாதா: தொடர்ந்து பேசிய மாரி செல்வராஜ், நான் பரியேறும் பெருமாள் படத்தில் அமைதியாக சில கருத்தை சொல்லி இருப்பேன். நான் அமைதியாக பேசினால், தாழ்வு மனப்பான்மை என்கிறார்கள், கோவமாக கருத்தை சொன்னால் வன்முறை என்கிறார்கள், அப்போ அனைவரின் எதிர்பார்ப்பும் நான் பேசக்கூடாது என்பதுதானா என்கிற கேள்வி எழுகிறது. ஒரு மனித சமூதாயத்தில் அறம் இல்லாத சூழல் நடந்து கொண்டு இருக்கிறது. அதை நீ எப்படி பார்க்கின்றாய் என்று தான் நான் கேட்கிறேன். அதற்கு ஏன் இவ்வளவு பேச்சு என தெரியவில்லை என மாரிசெல்வராஜ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











