Mari Selvaraj: பூங்கொடி டீச்சர் பாடலை பாடும் மாரி செல்வராஜின் மகன் யுவான் சுவாங்.. வீடியோ செம க்யூட்
சென்னை: கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் புரோமோசனில், இந்தப் படம் தனது சிறு வயதில் நடைபெற்ற உணமைச் சம்பவத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட படம் எனக் கூறியிருந்தார். மேலும் படம் பார்த்த இயக்குநர்கள் தொடங்கி பொது மக்கள் வ்ரை பலருமே படத்தைப் பாராட்டினர். மேலும் இயக்குநர்கள், நடிகர்கள் பொதுமக்கள் என பலரும் அழுதனர்.
படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற படமாக மாறியுள்ளது. படத்திற்கு பல காட்சிகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக இருந்தது. படத்திற்கு இப்போதுவரை ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். படத்தில் நடித்த அனைவரும் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றனர். பல ரசிகர்கள் படம் தங்களது மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தனர்.

மேலும் மாரி செல்வராஜ் பல இடங்களில் பேசுகையில், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள வேம்பு கதபாத்திரம், எனது சிறு வயதில் வாழைத் தார் சுமக்கும் வேலைக்குச் சென்று விபத்தில் இறந்து போன எனது அக்காவின் கதாபாத்திரம் என குறிப்பிட்டிருந்தார். இது மட்டும் இல்லாமல், எனது வாழ்வின் மிகப்பெரிய கண்ணீர்தான் இந்தப் படம் எனவும் படம் தொடங்குவதற்கு முன்னர் மாரி செல்வராஜ் குறிப்பிட்டிருந்தார்.

பாலா: வாழை படத்தினைப் பார்த்த இயக்குநர் பாலா, மாரி செல்வராஜைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். மேலும் கலங்கிய கண்களுடன் மாரி செல்வராஜின் கரங்களை வெகு நேரம் பற்றிக் கொண்டு, அதன் பின்னர் மாரி செல்வராஜிடம் ஒரே ஒரு வார்த்தை மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அதேபோல், நடிகர் தங்கதுரை படத்தை பார்த்ததும் வெளியே வந்து மாரி செல்வராஜை ஓடி வந்து கட்டிப்பிடித்து அழுதார்.

க்ளைமேக்ஸ்: படம் முழுவதும் நகைச்சுவை காட்சிகளாலும் உண்மைக்கு நெருக்கமான காட்சிகளாலும் ரசிகர்களை தனடு கட்டுக்குள் வைத்திருந்த மாரி செல்வராஜ், படத்தின் க்ளைமேக்ஸ் முடிந்து, படத்தின் இறுதி டைட்டில் கார்ட் முடியும் வரை அனைவரையும் இருக்கையிலேயே அமரவைத்திருந்தார். நீண்ட வருடத்திற்குப் பின்னர் இப்படியான ஒரு படம் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளது என பலரும் பாராட்டினர்.
பூங்கொடி டீச்சர்: வாழை படத்தில் பூங்கொடி டீச்சர் என்ற கதாபாத்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த கதாபாத்திரத்தில் நிகிலா விமல் நடித்தார். பூங்கொடி என்ற கதாபாத்திரத்தின் பெயரை மைய்யப்படுத்திய பாடல்களை சிவனைந்தான் கதாபாத்திரம் பாடும் விதமாக காட்சிகள் இருக்கும். அதில் இடம்பெற்றுள்ள ' மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி பாடல் இடம் பெற்றிருக்கும்.

அந்தப் பாடலை வாழை படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜின் மகன் யுவான் சுவாங் அதே பாடலை மிகவும் க்யூட்டாக பாடும் வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோ மிகவும் க்யூட்டாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் லைக் போட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











