அருவி இயக்குநரின் வாழ் படம்... 16ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியீடு... சிவகார்த்திகேயன் அறிவிப்பு

சென்னை : அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமனின் அடுத்த படைப்பு வாழ்.

இந்த படத்தை சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் நேரடியாக ஓடிடியில் வரும் 16ம் தேதி ரிலீசாக உள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

சிறப்பான படம்

சிறப்பான படம்

கடந்த 2017ல் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அருவி படம் வெளியானது. இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார் அதிதி பாலன். மேலும் அஞ்சலி வரதன், கவிதாபாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வசூலை வாரிக் குவித்தது.

வாழ் படம்

வாழ் படம்

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பில் தனது அடுத்த படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு வாழ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் முற்றிலும் புது முகங்கள் நடித்துள்ளனர். பிரதீப் குமார் இசையமைப்பில் குட்டி ரேவதி, அருண் பிரபு மற்றும் பிரதீப் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

சிவகார்த்திகேயன் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் அறிவிப்பு

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த ஜூன் 27ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் சோனி லைவ்வில் நேரடியாக வரும் 16ம் தேதி ரிலீசாக உள்ளதாக நடிகர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியீடு

இன்று வெளியீடு

மேலும் இன்றைய தினம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 3வது படமாக இந்த படம் உருவாகியுள்ளது. அருவி ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X