வாழ்க்கை தத்துவத்தை சொன்ன வாழ்வே மாயம்... 40 ஆண்டுகளை கடந்தது குறித்து ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை : நடிகர் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியாகி சிறப்பான வெற்றியை கொடுத்த படம் வாழ்வே மாயம்.

இந்தப் படத்தில் கங்கை அமரன் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின.

இந்நிலையில் படம் வெளியாகி 40 ஆண்டுகளை கடந்துள்ளது குறித்து கங்கை அமரன் அப்டேட் தெரிவித்துள்ளார்.

வாழ்வே மாயம் படம்

வாழ்வே மாயம் படம்

நடிகர் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா மூவரும் உச்ச நட்சத்திரங்களாக இருந்தபோது நடித்து வெளியான படம் வாழ்வே மாயம். ஒரு இளைஞன் சிறப்பான வாழ்க்கையையும் நோயால் மோசமான வாழ்க்கையையும் வாழ நேரும் சூழல்களை இந்தப் படம் கதைக்களமாக எடுத்திருந்தது.

கங்கை அமரன் இசை

கங்கை அமரன் இசை

இந்தப் படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார் கவிஞர் வாலி. அவரது இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் அந்த காலகட்டத்தில் மட்டுமின்றி தற்போதுவரை எவர்கிரீன் பாடல்களாக அமைந்துள்ளது. பில்லா ஆர் கிருஷ்ணமூர்த்தி படத்தை இயக்கியிருந்தார்.

சிறப்பான காதல் கதை

சிறப்பான காதல் கதை

சிறப்பான காதல் படங்களின் வரிசையில் இந்தப் படத்திற்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு. தான் உருகி உருகி காதலித்த பெண்ணின் வாழ்க்கை தன்னுடைய நோயால் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் கமல் அவரை வெறுப்பது போல நடிக்க, அவரும் வேறு ஒருவரை திருமணம் செய்வதாக கதை நகரும்.

ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படம்

ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படம்

கங்கை அமரன் இசையமைத்த சில படங்களில் இந்தப் படம் மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது. அந்த காலத்தில் வானொலியில் இந்தப் பாடல்கள் அடிக்கடி ஒலிபரப்பாகி ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக அமைந்தது.

சிறப்பான பாடல்கள்

சிறப்பான பாடல்கள்

குறிப்பாக நீல வான ஓடையில், வந்தனம் என் வந்தனம், வாழ்வே மாயம் போன்ற பாடல்கள் எப்போதுமே ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடல்களாக அமைந்தவை. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் தாங்கள் சிறப்பான காதல் ஜோடி என்பதை கமல் -ஸ்ரீதேவி மீண்டும் நிரூபித்தனர்.

40 ஆண்டுகளை கடந்த படம்

40 ஆண்டுகளை கடந்த படம்

கமல் சினிமா கேரியரில் சிறப்பான படமாக வாழ்வே மாயம் காணப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி தற்போது 40 ஆண்டுகளை கடந்துள்ளது. இதுகுறித்து வாழ்வே மாயம் பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ரசிகர்களும் பல்வேறு ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X