வச்சுக்கவா... நரபலிக்கு எதிராக ஒரு படம்!
தர்மபுரியில் சாமியார் ஒருவர் குழந்தைகளை திடீர் திடீரென்று நரபலி கொடுத்த சம்பவத்தை செய்திகளாக பத்திரிகைகளில் பார்த்திருக்கிறோம்.
இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகிவரும் புதிய படம் 'வச்சிக்கவா'.

புதுமுகங்கள்
இப்படத்தில் புதுமுகங்களான மாணிக்கவேல்-பிரியங்கா என்ற இளம் காதல் ஜோடிகள் நடித்துள்ளனர். பிரியங்கா இப்படத்திற்காக அச்சிதா என தன் பெயரை மாற்றம் செய்துள்ளார்.

சாமியார்
படத்தில் சாமியார் குழந்தைகளை நரபலி கொடுக்கும் சம்பவத்தை கதாநாயகி பார்த்து விடுகிறார். இதை சாமியார் பார்த்து தன் அடியாட்களை அனுப்பி நாயகியை துரத்தும் காட்சிகளை திகிலோடு படமாக்கியிருக்கிறார்கள்.
இப்படத்தின் இயக்குனரான ஏ.ஆர்.ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தயாரிப்பாளரான ‘கொங்கு செல்வர்' ராஜ அம்மையப்பன் திகிலூட்டும் சாமியாராக படத்தில் தோன்றுகிறார்.

ஹேமா
காமெடி வேடத்திற்கு தமிழ் என்ற புதுமுகம் அறிமுகமாகியிருக்கிறார். மேலும் மற்றொரு நாயகியான ஹேமா கவர்ச்சி வேடத்தில் வருகிறார். இவர்களுடன் மோகன், கார்த்திக், ராம்குமார், ரஜினிபாபு போன்ற புதுமுகங்களும் நடித்துள்ளனர்.

எல்லாம் இயக்குநரே..
சேலம், பொள்ளாச்சி, ஏற்காடு ஆகிய இடங்களை தேர்வு செய்து படத்தின் முக்கிய காட்சிகளையும் 6 பாடல்களையும் படமாக்கியுள்ளனர். படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, பாடல்கள் ஆகிய பணிகளையும் இயக்குனர் ஏ.ஆர்.ரவியே மேற்கொண்டுள்ளார்.
இப்படத்திற்கு ரித்தேஷ் இசையமைத்திருக்கிறார். எம்.பி.எஸ் மணி வழங்க லலீனா சினி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பாக ‘கொங்கு செல்வர்' ராஜ அம்மையப்பன் இப்படத்தை தயாரிக்கிறார்.


Click it and Unblock the Notifications