அடுத்து வாடிவாசல் தான்... வடசென்னை 2 ஸ்க்ரிப்ட் ரெடியாகவில்லை... வெற்றிமாறனின் ஷாக்கிங் அப்டேட்!

சென்னை: விடுதலை முதல் பாகத்தின் ட்ரெய்லர், ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்கும் இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், விடுதலை ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய வெற்றிமாறன், வாடிவாசல், வட சென்னை 2 பற்றிய அப்டேட் கொடுத்துள்ளார்.

 விடுதலை ட்ரெய்லர் வெளியீட்டு விழா

விடுதலை ட்ரெய்லர் வெளியீட்டு விழா

வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கோலிவுட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. ட்ரெய்லருடன் விடுதலை படத்தின் பாடல்களும் வெளியானது.

 வெற்றிமாறன் சொன்ன அப்டேட்

வெற்றிமாறன் சொன்ன அப்டேட்

இளையராஜாவின் இசை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற விடுதலை ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, தயாரிப்பாளர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய வெற்றிமாறன், விடுதலை படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் முதல் டெக்னீஷியன்கள் வரை அனைவருக்கும் நன்றி கூறினார். மேலும் தொடர்ந்து இந்தப் படம் உருவான விதம் குறித்தும் விரிவாகப் பேசினார். இறுதியாக அவரிடம் வாடிவாசல், வட சென்னை 2 படங்கள் பற்றிய அப்டேட் கேட்டு ரசிகர்கள் குரல் எழுப்பினர்.

 முதலில் வாடிவாசல் தான்

முதலில் வாடிவாசல் தான்

விடுதலை ட்ரெய்லர் நேற்று வெளியானாலும், இன்னும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவிக்கவில்லை. இந்நிலையில், வாடிவாசல், வட சென்னை 2 குறித்து கேட்ட ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொஞ்சம் ஷாக்கிங்கான அப்டேட் கொடுத்தார். அதாவது விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் வெளியான பின்னர் தான் வாடிவாசல் ஷூட்டிங் தொடங்கும் என்றார். சூர்யா நடிக்கவுள்ள இந்தப் படம் ஜல்லிக்கட்டுப் போட்டியை பின்னணியாகக் கொண்டு உருவாகவுள்ளது.

 வட சென்னை 2 அப்டேட்

வட சென்னை 2 அப்டேட்

சூர்யா தற்போது 'சூர்யா 42' படத்தில் நடித்து வருகிறார், அதனை முடித்துவிட்டு வாடிவாசலில் இணைவார் என தெரிகிறது. வாடிவாசல் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பின்னர் தான் வட சென்னை இரண்டாம் பாகத்திற்கான கதை ரெடியாகும் என வெற்றிமாறன் கூறினார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர். வாடிவாசல் படப்பிடிப்பு முடிவதற்கே 2024ம் ஆண்டு இறுதியாகிவிடும் என சொல்லப்படுகிறது. அதன்பிறகு வட சென்னை 2 சொன்னபடி தொடங்குமா என்பது தெரியவரும்.

 ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அமீர், தனுஷ், சமுத்திரகனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடித்த வட சென்னை திரைப்படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தில் தனுஷின் வேற லெவல் சம்பவம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், இன்னும் ஸ்க்ரிப்ட் ரெடியாகவில்லை என வெற்றிமாறன் சொன்னது, தனுஷ் ரசிகர்களுக்கு ஷாக்கிங்காக அமைந்துள்ளது.

 விடுதலை ரிலீஸ் தேதி

விடுதலை ரிலீஸ் தேதி

இதனிடையே விடுதலை திரைப்படம் மார்ச் 31ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், இன்னும் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் முடியவில்லை என்பதால், ஏப்ரல் அல்லது மே மாதம் தான் வெளியாகுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை ட்ரெய்லரோடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X