தனுஷின் 'வட சென்னை' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்... தனுஷ் அறிவிப்பு!
Recommended Video

சென்னை : தனுஷ் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'வட சென்னை', 'மாரி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அதில் முதல் இரண்டு படங்களும் நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ளது. வெற்றிமாறன் இயக்கிவரும் 'வடசென்னை படம் மூன்று பாகங்களாக உருவாகிறது.
அதில் முதல் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் மார்ச் 8-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த அறிவிப்பை தனுஷ் வெளியிட்டுள்ளார்.
வடசென்னை
தமிழ் சினிமாவின் பெருமையை 'விசாரணை' மூலம் உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'வடசென்னை'. 'வடசென்னை' படம் 3 பாகமாக எடுக்கப்பட இருக்கிறது முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

தனுஷ்
இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. இந்தப் பட்டம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வடசென்னை முதல் பாகத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக்
தற்போது நடந்துவரும் டப்பிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளை முடித்து படத்தை ரம்ஜான் விடுமுறைக்காக ஜூன் 14 அன்று வெளியிட தனுஷ் முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் வியாழக்கிழமை (மார்ச் 8) ரிலீஸாகும் என அறிவித்துள்ளார் தனுஷ்.

கதை
'வடசென்னை' படத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். வடசென்னை படம் சென்னையில் மீனவர்கள், மற்றும் அந்த சுற்றுச் வட்டார மக்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் அரசியல் தான் கதை என தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











