வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் வடசென்னை நாயகி
சென்னை : டைரக்டர் வெற்றிமாறன் அடுத்தடுத்த படங்களை மிகவும் பிசியாக இயக்கி வருகிறார்.
மேலும் தயாரிப்பாளராகவும் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி என்ற பெயரில் படங்களை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஆனந்த் என்பவரது இயக்கத்தில் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளார்.

அடுத்தடுத்த வெற்றி படங்கள்
டைரக்டர் வெற்றிமாறன் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அவரது படங்களில் சமூக அக்கறையும் காணப்படுகிறது. மேலும் வித்தியாசமான கதைக்களத்தையும் கொண்டு படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் அவரது அசுரன் படம் வெளிவந்து சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

வெற்றிமாறன் இயக்கம்
தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கவுள்ளார். சூர்யாவின் வாடிவாசல் படத்தையும் இயக்கி வருகிறார்.

ஆனந்த் இயக்கம்
இந்த படத்திற்கு சிறப்பான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களை தயாரித்துவரும் அவர் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனிக்காக அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை ஆனந்த் என்பவர் இயக்கவுள்ளார்.

வெற்றிமாறனுடன் கூட்டணி
இந்த படத்தில் நடிகை ஆன்ட்ரியா நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னை படத்தில் முன்னதாக ஆன்ட்ரியா நடித்துள்ளார். மேலும் அவரது ஆடுகளம் படத்தில் டாப்சிக்கு பின்னணி கொடுத்துள்ளார். இந்நிலையில் அவரது தயாரிப்பில் ஆன்ட்ரியா நடிக்கவுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்
பெண்களை மையமாக கொண்டு இந்த படம் உருவாகவுள்ளது. சமீபத்தில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் தோன்றிய ஆன்ட்ரியா, தற்போது மிஸ்கினின் பிசாசு2 மற்றும் சுந்தர் சியின் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











