இப்படிக்கூடவா ஏமாத்துவாங்க.. தயவு செய்து மீட்டுக்கொடுங்க.. மன உளைச்சலில் நடிகை!
சென்னை: நாடகத்துறையில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை மணிமேலை, சினிமாவில் நுழைந்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இவர், ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் திரைப்படத்தில் ஜீவாவின் அம்மாவாகவும், வடசென்னை மற்றும் அசுரன் படத்தில் தனுஷின் அம்மாவாகவும் நடித்து பிரபலமானார். சென்னை வில்லிவாக்கத்தில் வசித்து வரும் மணிமேலை, படங்கள் இல்லாத போது, ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பகுதி நேரமாக பாட்டு சொல்லி கொடுத்து வருகிறார். இவர், கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தில் வாங்கிய காரை ஒருவன் ஏமாற்றி அடமானம் வைத்துவிட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
நடிகை மணிமேகலை, சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தில் 2023ம் ஆண்டு தவணை முறையில் suzuki baleno கார் ஒன்றை வாங்கி உள்ளார். தனக்கு கார் ஓட்ட தெரியாததால், தனது மகன் கண்ணன் மூலம் படப்பிடிப்பு தளங்களுக்கு மணிமேகலை அந்த காரில் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், மகன் கண்ணனின் நண்பர் ரத்னவேல் என்பவர் அவசர தேவைக்காக பணம் வேண்டும் என்றும், அந்த பணத்தை விரைவில் கொடுத்துவிடுவாக கேட்டுள்ளார். இதையடுத்து, கண்ணன், ரத்னவேலுக்கு 6 லட்சத்தை கடனாக கொடுத்துள்ளார். விரைவில் பணத்தை திரும்பி தருகிறேன் என்று சொன்னவர், பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளார். இதையடுத்து, ரத்னாவேல், தஞ்சாவூரில் பெரிய வேலை ஒன்று முடிந்து விட்டது, இப்போது பணம் ரெடியாக இருக்கிறது. நீ தஞ்சாவூருக்கு உடனே வந்தால் பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்ல, மணிமேகலையின் மகன் கண்ணன் காரில், தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

ஏமாற்றிவிட்டார்: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள லாட்ஜில் கண்ணை தங்க வைத்த ரத்தினவேல், அவரை பார்த்துவிட்டு, இப்போது என்னிடம் பணம் இல்லை, மும்பை சென்று தான் பணத்தை வாங்க வேண்டும் என சொல்லி, கண்ணணுக்கு மும்பைக்கு விமான டிக்கெட் போட்டு, தனது நண்பரோடு சென்று பணத்தை வாங்கிக் கொள்ள என கூறி மும்பைக்கு அனுப்பி வைத்துள்ளார். கண்ணன் மும்பை சென்ற நேரத்தில், கண்ணனின் suzuki baleno காரை, ரத்னவேல் 6 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்து பணத்தை வாங்கி உள்ளார். மும்பையில் இருந்த வந்த கண்ணன் காரை கேட்ட போது, எனக்கு தெரியாது என பதில் அளித்துள்ளார் ரத்னவேல். இதையடுத்து, ஜிபிஎஸ் உதவியுடன் காரை தேடிச்சென்ற போது, காரை ரத்னவேல் அடமானம் வைத்து பணம் வாங்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கண்ணன் தஞ்சாவூர் காவல் நிலையத்தில் ரத்னவேல் மீது புகார் அளிக்க சென்றுள்ளார்.
மீட்டுக்கொள்ளுங்கள்: ஆனால், போலீசார் அந்த வழக்கை கண்டு கொள்ளாததால், நான்கு மாதங்கள் கழித்து நடிகை மணிமேகலை, தஞ்சாவூருக்கு சென்று புகார் அளித்துள்ளார். அதன் பின்பு தான், போலீசார் அந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், காரில் இருக்கும் ஜிபிஎசை வைத்து, மணிமேகலையின் மகன் காரை இருக்கும் இடத்தையும், கார் வைத்து இருப்பவர் குறித்து தகவல் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாகியும் போலீசார், இன்னும் காரை மீட்டுத்தரவில்லை, பயன்படுத்தாத காருக்கு மாதா மாதம் பத்தாயிரம் கட்டி வருவதாகவும், இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், காவல்துறையினர் எனது காரை மீட்டுத்தர வேண்டும் என நடிகை கண்ணீர் மல்க கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











