ரத்த சரித்திரம் சொல்லும் வடசென்னை - ஓர் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்
சென்னை: வடசென்னையில் 1980, 90களில் நடந்த பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கபட்ட படம் வடசென்னை. தனுஷ் நடித்த படங்களிலேயே முக்கியமான படமாய் பார்க்கப்படுகிறது. இப்படத்தை தானே தயாரித்தும் இருந்தார் தனுஷ். இப்படம் வெளியாகி ஓர் ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி தனுஷ் ரசிகர்கள் அதை சமூக வலைதளங்களில் பதிவுட்டு கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 2018 அக்டோபர் 17ஆம் தேதியன்று தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படம் ரலீஸ் ஆனது. இப்படத்தில் தனுஷ், ஜஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ராதா ரவி, பவன் ஆகியோர் நடித்து மாபெரும் வெற்றி அடைந்த படம் இது.

வடசென்னையில் 1980, 90களில் நடந்த பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கபட்ட படம் வடசென்னை. தனுஷ் நடித்த படங்களிலேயே முக்கியமான படமாய் பார்க்கப்படுகிறது. அதுவரை அவருக்கு கிடைக்காத மாஸ் ஓப்பனிங் இந்த படத்தில் கிடைத்தது. படத்தை தானே தயாரித்தும் இருந்தார் தனுஷ்.
வடசென்னை கதை, ராஜன் எனும் மக்கள் நலவாதியின் கை வடசென்னையில் ஒங்கி இருக்கிறது. அவரைத் தாண்டி எந்த அதிகாரமும் ஊருக்குள்ளே நுழைய முடியாத நிலை. ஆனால் ஒரு கட்டத்தில், உடன் இருக்கும் நண்பர்களே துரோகியாய் மாறி விடுகின்றனர்.

பின் அவர்கள் இரு பிரிவாக பிரிய அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனை, இதனை சாதகமாக்கி எல்லோரையும் அழிக்க நினைக்கும் ராஜன் மனைவி. அன்பை கைக்குள் போட்டுக்கொண்டு அனைத்தையையும் செய்கிறாள். இத்துடன் வடசென்னை பாகம் 1 முடிகிறது. இப்படம் வெளியாகி ஓர் ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி தனுஷ் ரசிகர்கள் அதை சமூக வலைதளங்களில் பதிவுட்டு கொண்டாடி வருகின்றனர்.
வடசென்னை பாகம் 2 அன்புவின் எழுச்சி என்று படத்தின் இறுதியில் போடப்பட்டது. இதற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
வெற்றிமாறன் எப்பொழுதுமே சமுதாயத்தை பாதிக்கின்ற பிரச்சனை சார்ந்த படங்களையே எடுப்பார். இந்த படக்கதையைக் கூட ஒரு கேங்ஸ்டர் மூவியாக எடுத்திருக்கலாம். ஆனால் அதைத் தாண்டி சேரியில் நடக்கும் பிரச்சினை, அவர்களின் வாழ்வியல் மற்றும் அவர்களை முன்னேற்ற, படிக்க மற்றும் விளையாடச் சொல்லும் ஹீரோ என பல விசயங்கள் படத்தில் உள்ளது.

வெற்றிமாறன் தன்னுடைய அனைத்து படங்களிலும் ஒரு ஒன்டேக் ஷாட் வைப்பார். அதைப் போலவே இந்த படத்திலும் ராஜனை கொல்லும் காட்சியை அவ்வாரே படமாக்கி இருப்பார்.
தற்போது வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி அசுரன் படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு பிறகு வெற்றிமாறன் சூரியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அதற்கு பிறகு வடசென்னை 2 படத்தை இயக்க போவதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











