சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் வில்லனாக நடிக்கும் வடசென்னை சரண்!

சென்னை : நடிகர் சூர்யா இப்பொழுது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒரே கட்டமாக படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

டாக்டர்,டான் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகை பிரியங்கா அருள்மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சூரி,சரண்யா, பொன்வண்ணன், தங்கதுரை என மிகப் பெரிய பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது .

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் 51 நாள் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இதில் வில்லனாக வடசென்னை புகழ் சரண் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஆஸ்கர் தேர்விலும்

ஆஸ்கர் தேர்விலும்

சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் ஆந்திராவில் சூர்யாவிற்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளார்களோ அதே அளவிற்கு அங்கும் இருக்க இவரது பல திரைப்படங்கள் அங்கும் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்து வருகிறது. கடைசியாக வெளியான சூரரைப்போற்று தமிழ்,தெலுங்கு ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் ஆஸ்கர் தேர்விலும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் இன்று வரை பல்வேறு சர்வதேச விருதுகளை வென்று வர இதில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி மிகச் சிறப்பாக நடித்திருப்பார். 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம், தீதும் நன்றும் உள்ளிட்ட படங்களுக்கு பிறகும் அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பிரபலம் அடையாத அபர்ணா பாலமுரளி சூரரைப்போற்று திரைப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஓவர் நைட்டில் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். சூர்யாவின் நடிப்பு சூரரைப்போற்று படத்தில் எந்த அளவுக்கு பாராட்டப்பட்டதே அதே அளவிற்கு அபர்ணா பாலமுரளி பொம்மி கதாபாத்திரமும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் படம் வெளியான பிறகு ரசிகர்கள் பலரும் பொம்மி போன்ற மனைவி தான் எனக்கு வேண்டும் என ஸ்டேட்டஸ் போட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த அளவிற்கு பொம்மி கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

சென்சேஷனல் ஹிட்

சென்சேஷனல் ஹிட்

இவ்வாறு சூரரைப் போற்று என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த சூர்ய அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கிய நிலையில் திடீரென கொரோனஸ் நோய் தொற்று பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து படப்பிடிப்பு நடக்காமலிருக்க வெற்றிமாறன் இதற்கு மத்தியில் விடுதலை என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார். எனவே சூர்யாவும் அந்த கேப்பில் மற்றுமொரு திரைப்படத்தில் நடித்து முடிப்பதாக முடிவு செய்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் குடும்பக் கதையில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். கடைக்குட்டி சிங்கம் என்ற சென்சேஷனல் ஹிட் படத்தை கொடுத்த பாண்டிராஜ் அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தையும் இயக்கி அந்தப் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை இயக்கி வெற்றி மேல் வெற்றி கொடுத்த பாண்டிராஜ் இப்பொழுது சூர்யாவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க அப்படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நேரடியாக ஓடிடியில்

நேரடியாக ஓடிடியில்

தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பிரியங்கா அருள் மோகன் தமிழில் டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இப்படம் இன்னும் சில மாதங்களில் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பாகவே தமிழ் ரசிகர்களால் அதிக அளவு விரும்பப்பட்ட பிரியங்கா அருள்மோகன் இப்பொழுது சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

மேலும் இதில் சத்யராஜ்,சரண்யா பொன்வண்ணன், சூரி, தங்கதுரை, தேவதர்ஷினி, இளவரசி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். கிராமத்து கதையை மையமாகக் கொண்டும் கூட்டுக் குடும்பத்தை பற்றியும் இப்படம் தயாராகி வர முக்கிய கதையாக பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை பற்றிய படமாக உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் 51 நாட்கள் ஒரே கட்டமாக எடுத்து முடிக்கப்பட்டது என இயக்குனர் பாண்டிராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. இப்படத்திற்கு டி இமான் இசை அமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக பிரபல இளம் நடிகர் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Recommended Video

VadaChennai Prequel: வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் இனையும் Ken Karunas | Rajan Vagaiyara
வில்லனாக சரண்

வில்லனாக சரண்

பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் சரண் வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தம்பியாக நடித்து அனைவரிடத்திலும் பாராட்டுக்களைப் பெற்றார். அதைத் தொடர்ந்து சகா என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து இருந்தார். கடைசியாக நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் சரண் இப்பொழுது நடித்து வருகிறார். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உருவாகி வரும் இந்தப் படத்தில் சரண் வில்லனாக நடித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X