வடக்கன் படத்தின் தலைப்பு அதிரடியாக மாற்றம்.. காரணம் என்ன?

சென்னை: எழுத்தாளரும் கதை, வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தி, இயக்குநராக அறிமுகமாகும் படம் வடக்கன். இப்படத்தின் தலைப்புக்கு தணிக்கை குழு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து படக்குழு படத்தின் தலைப்பை அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது.

வடக்கன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடம் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தில், இதில் குங்குமராஜ், வைரமாலா ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா என பலர் நடித்துள்ள இந்தப் படத்தை டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரித்துள்ளார். எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் 24ந் தேதி வெளியாக இருந்த நிலையில், படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள், வடக்கன் என்ற தலைப்பை மாற்ற வேண்டும் என்றனர். இதனால், படக்குழு ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. '

Vadakkan Rail censor board

இதையடுத்து படத்திற்கு ’ரயில்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிஸ்கவரி சினிமாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான வேலைகளில் வட இந்தியர்கள் இருப்பதும், தமிழர்களின் வேலைகளை அவர்கள் பறித்து விட்டார்கள் என்றும் அவர்களை கொல்லாமல் விடமாட்டோம் என்றும் தமிழ்நாட்டில் இருந்து அவர்களை வெளியேற்றுவோம் என்றும் கூறும் ஒரு நபரின் கதை தான் இந்த ரயில் படத்தின் கதை என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X