Vadakkupatti Ramasamy Box Office: சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி 3வது நாள் வசூல் இத்தனை கோடியா?

சென்னை: சந்தானம் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் 2ம் தேதி வெளியானது. கார்த்திக் யோகி இயக்கத்தில் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் இந்தப் படத்துக்கு தரமான வசூல் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வடக்குப்பட்டி ராமசாமி மூன்றாவது நாள் வசூல்: காமெடியனாக கலக்கிய சந்தானம் இப்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அதன்படி தற்போது சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தப் படம் ரிலீஸுக்கு முன்பே சர்ச்சையில் சிக்கியது. இதனால் மக்களிடம் வரவேற்பு கிடைக்குமா கிடைக்காதா என எதிர்பார்ப்பு இருந்தது.

 Vadakkupatti Ramasamy Box Office: Vadakkupatti Ramasamy movie has collected Rs 3.26 Crores in 3 days

இந்நிலையில், பிப். 2ம் தேதி ரிலீஸான வடக்குப்பட்டி ராமசாமி, எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படமும் சந்தானத்தின் லொள்ளு சபா குழுவின் காமெடி அட்ராசிட்டியாக உருவாகியுள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் காமெடி காட்சிகள் அனைத்தும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பதாகவும் அவர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் சந்தானத்துடன் மேகா ஆகாஷ், மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ் பாஸ்கர், ஜான் விஜய், நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 600க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி, பாக்ஸ் ஆபிஸிலும் பெரிய சக்சஸ் கொடுத்துள்ளது. அதாவது சந்தானத்தின் படங்களிலேயே வடக்குப்பட்டி ராமசாமி தான் பெஸ்ட் ஓபனிங் என சொல்லப்படுகிறது.

அதன்படி முதல் நாளில் 70 லட்சம் வரை வசூலித்த வடக்குப்பட்டி ராமசாமி, இரண்டாவது நாளில் 1.10 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்தது. இதனால் முதல் இரண்டு நாட்களில் 1.77 முதல் 2.15 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் ஆகியுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமையான நேற்றும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் கலெக்‌ஷன் அதிகரித்துள்ளது.

அதாவது முதல் இரண்டு நாட்களை விட அதிகமாக 1.35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது வடக்குப்பட்டி ராமசாமி. இதனடிப்படையில் மூன்று நாட்களில் மொத்தம் 3.26 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் கலெக்‌ஷன் உச்சம் தொட்டுள்ளது. இதனால் வரும் நாட்களிலும் இந்தப் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X