VadakkupattiRamasamy BoxOffice: பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் வடக்குப்பட்டி ராமசாமி..2வது நாள் வசூல்

சென்னை: இந்த வாரம் திரையரங்குகளில் வடக்குப்பட்டி ராமசாமி, டெவில் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இதில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கார்த்திக் யோகி இயக்கத்தில் காமெடி ஜானர் படமாக வெளியான வடக்குப்பட்டி ராமசாமி, பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

வடக்குப்பட்டி ராமசாமி இரண்டாவது நாள் வசூல்

முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வந்தவர் சந்தானம். விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான சந்தானத்துக்கு சினிமாவிலும் வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. இதனால் ஒருகட்டத்தில் காமெடி கேரக்டர்களை தவிர்த்துவிட்டு முழுநேர ஹீரோவாக மாறினார். ஆனாலும் ஒரு சில படங்கள் மட்டுமே சந்தானத்துக்கு ஹீரோவாக சக்சஸ் கொடுத்தது.

Vadakkupatti Ramasamy movie has collected Rs 2 Crores in two days


கடந்தாண்டு டிடி ரிட்டர்ன்ஸ் படம் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த சந்தானம், இப்போது வடக்குப்பட்டி ராமசாமியாக கம்பேக் கொடுத்துள்ளார். கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ், மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ் பாஸ்கர், ஜான் விஜய், நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி, 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தமிழ்நாட்டில் மட்டுமே 600க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், ஃபேமிலி ஆடியன்ஸுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்கு அதிகம் எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்ததால், முதல் இரண்டு காட்சிகளுக்கு டிக்கெட் புக்கிங் குறைவாகவே இருந்தன.

ஆனால், அடுத்தடுத்து பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியானதை அடுத்து, வடக்குப்பட்டி ராமசாமி வெளியான திரையரங்குகள் திருவிழா போல மாறியுள்ளது. விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் இந்தப் படம் மாஸ் காட்டி வருகிறது. அதன்படி முதல் நாளில் 70 லட்சம் வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. அதேநேரம் சோஷியல் மீடியா சினிமா ட்ராக்கர்கள் 1 முதல் 1.5 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என தெரிவித்தனர்.

இந்நிலையில், இரண்டாவது நாளில் வடக்குப்பட்டி ராமசாமி வசூல் 1.10 கோடி ரூபாய் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதன்மூலம் முதல் இரண்டு நாட்களில் 1.77 முதல் 2.15 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் ஹீரோவாக சந்தானம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். அதேபோல் இனி வரும் நாட்களிலும் வடக்குப்பட்டி ராமசாமி வசூல் அதிகரிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X