ஜெ. கூட்டத்துக்கு விஜயகாந்த் போகாதது ஏன்?: வடிவேலு

By Chakra

Vadivelu
நத்தம் & தேனி: நத்தம் கோபால்பட்டியில் திமுக வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்ய வந்த நடிகர் வடிவேலு அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு விஜய்காந்தைப் போல பரபரப்பை ஏற்படுத்தினார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் திமுக வேட்பாளர் விஜயனை ஆதரித்து வடிவேலு பிரச்சாரம் செய்தார். அப்போது வடிவேலு பேசுகையில், திமுகவை ஆதரித்தால் உங்கள் இல்லங்களில் விளக்கு எரிந்து சுபிட்சம் உண்டாகும்.

எதிரணியினர் பேச்சை கேட்டு நன்றி மறந்தவர்களாக இருக்க வேண்டாம். எனவே, உங்கள் ஓட்டை நத்தம் விசுவநாதனுக்கு (அதிமுக வேட்பாளர்) போடுங்கள் என்றார்.

வடிவேலுவின் இந்த 'டங்-ஸ்லிப்பால்' பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினர் சத்தம் போட சுதாரித்துக் கொண்ட வடிவேலு, க.விஜயனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று மாற்றி கூறினார்.

விஜய்காந்த் தான் அடிக்கடி மாற்றிப் பேசி குழப்பம் விளைவித்து வருகிறார். அவரை வடிவேலு தான் மிக அதிகமாக கிண்டலடித்து வருகிறார். இந் நிலையில் விஜய்காந்தைப் போலவே வடிவேலும் குழப்பியது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் தான் விஜயகாந்த்தை அடிக்க வேண்டும்:

முன்னதாக தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து தேனி நேரு சிலை அருகில் நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். அங்கு அவருக்கு பெரும் கூட்டம் கூடியது.

வடிவேலு பேசுகையில், சாதாரண ஏழையான நான் ஏழையின் கஷ்டம் அறிந்ததால் கருணாநிதியின் ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக பிரசாரம் செய்ய வந்திருக்கிறேன்.

இலவசங்களை கொடுப்பதை குறைகூறியவர்கள் இன்றைக்கு இலவசங்களை அறிவித்துள்ளனர். ஓட்டுரிமை உள்ளவர்களுக்கு மட்டும் இல்லாமல் கருவில் குடியிருக்கும் சிசுவுக்கும் மாதம் ரூ.ஆயிரம் வீதம் தருபவர் கருணாநிதி. 108 ஆம்புலன்ஸ், மற்றும் கலைஞர் காப்பீடு திட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிர் பிழைத்திருப்பர். கருவறை முதல் கல்லறை வரை கருணாநிதியின் திட்டங்கள் சென்று சாதனை படைத்துள்ளது.

இத்தனை திட்டங்களை தந்த கலைஞருக்கு இருந்து உதவியை பெற்றுக் கொண்டு ஓட்டுக்களை மட்டும் எதிர்த் தரப்பினருக்கு போட வேண்டுமாம். தமிழக மக்கள் ஏமாளிகளா அல்லது நன்றி மறந்தவர்களா?.

எனது தங்கையை தேனியில்தான் திருமணம் செய்து கொடுத்திருக்கிறேன். இங்கே உள்ள அனைவரும் எனது சொந்தங்கள். ஒரு ரவுண்டு, இரண்டு ரவுண்டு என நான்கு ரவுண்டு போனால் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமலேயே பேசி வருகிறார் விஜய்காந்த். பெயரை மாற்றி சொன்னதற்கு வேட்பாளரை அடிக்கிறார். உண்மையில் சொல்லப் போனால், பெயரை மாற்றி சொன்னதற்கு வேட்பாளர்தான் விஜயகாந்த்தை அடிக்க வேண்டும்.

இந்த ஆளை எப்படி எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் சேர்த்தனரோ தெரியவில்லை. இவருக்கு போய் 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் செல்லும் பகுதியில் எல்லாம் இந்தப்'புயல்' பின் தொடர்ந்து வந்து அவரது முகத்திரையை கிழிக்கும் என்றார்.

பின்னர் பழனி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து நடிகர் வடிவேலு பேசுகையில், தமிழக முதல்வர் கலைஞர் 6வது முறையாக முதல் அமைச்சர் ஆகி விட்டார் என்பதை இந்த கூட்டம் காட்டுகிறது. இது வரலாறு காணாத கூட்டம்.
இது போன்ற கூட்டத்தை நான் பார்த்தது இல்லை.

பழனி முருகன் கோவில் முன்பு நின்று பேசுவது எனக்கு பெருமையாக உள்ளது.

கலைஞர் கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகள் ஏராளம். திமுக ஆட்சியில் செய்த திட்டங்கள் அனைத்தும் உங்களுக்கு தெரியும். ஏழை -எளிய மக்களுக்காக அவர் திட்டங்களை வாரி வழங்கியுள்ளார்.

இப்போது கருப்பு எம்.ஜி.ஆர் என்று ஒருவர் கிளம்பி இருக்கிறார். எம்.ஜி.ஆர் என்பவர் ஒருவர் தான். கருப்பு, பச்சை, ரோஸ் என்று எம்.ஜி.ஆர் யாரும் கிடையாது.
கேப்டன் என்கிறார். அதற்கு அவருக்கு என்ன அருகதை உள்ளது. தொகுதி உடன்பாட்டுக்கு முன்பு மனரீதியான உடன்பாடு இருக்க வேண்டும். அது அவர்களுக்கு இல்லை.

அதிமுக கூட்டணியில் ஒரே மேடையில் தலைவர்கள் பேசினால் சரியான கூட்டணி என்று கூறி இருந்தேன். ஆனால் மேடையில் அவரை காணவில்லை.

அதிமுக-தேமுதிக கூட்டணி தண்ணீரும், எண்ணையும் கலந்த கூட்டணி. எண்ணையும், தண்ணீரும் சேருமா? அது சேராது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X