வடிவேல் பாலாஜி திடீர் மரணம்.. நள்ளிரவில் நடந்தது என்ன? நடிகர் ஆதவன் வெளியிட்ட பகீர் தகவல்!

சென்னை: பில் கட்ட முடியாமல் போனதால் தனியார் மருத்துவமனை வடிவேல் பாலாஜியை நள்ளிரவில் வெளியேற்றியதாக நடிகர் ஆதவன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சக்கணக்கான மக்களை சிரிக்க வைத்த நடிகர் வடிவேல் பாலாஜியின் திடீர் மரணம் அவரது ரசிகர்களையும் சக நடிகர் நடிகைகளையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வடிவேல் பாலாஜி நிதி நெருக்கடியில் இருந்ததாகவும், அறுவை சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் சிரமப்பட்டதாகவும் பல நடிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

முறையான சிகிச்சையில்லை

முறையான சிகிச்சையில்லை

ஆனால் வடிவேல் பாலாஜியின் தாயார், வடிவேல் பாலாஜிக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை 20 லட்சம் ரூபாய் வரை பறித்துக் கொண்டு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

 நடிகர் ஆதவன் பகீர்

நடிகர் ஆதவன் பகீர்

வடிவேல் பாலாஜியின் சகோதரரும் அவரது மைத்துனரும், குணமாகாத போதே அவரை தனியார் மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்துவிட்டதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில் பிரபல சின்னத்திரை நடிகரும் தொகுப்பாளருமான ஆதவன், சில பகீர் தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஷிப்ட் முடிந்ததும்

ஷிப்ட் முடிந்ததும்

அவர் பேசியிருப்பதாவது, எனக்கு வடிவேல் பாலாஜியை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்தே தெரியும். அவர் அப்போது ஒரு சவக்கிடங்கில் பணிபுரிந்தார். அங்கு அவரது ஷிப்ட் முடிந்தபின் ஸ்டுடியோவுக்கு வந்து நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்ப்பது வழக்கம். அவர் கடின உழைப்பாளி. "

சிறுநீரகம் செயலிழப்பு

சிறுநீரகம் செயலிழப்பு

"அவரது கொடுமையான மரணம் பற்றி வெளியே வராத, தெரியாத சில சம்பவங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வடிவேல் பாலாஜிக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இதை அவரிடம் தெரிவிக்கவில்லை.

நள்ளிரவில் வெளியேற்றி

நள்ளிரவில் வெளியேற்றி

அவரது குடும்பத்தினர் பில்களை செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டதால், தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவரை நள்ளிரவில் டிஸ்சார்ஜ் செய்து வெளியேற்றியுள்ளது. வடிவேல் பாலாஜிக்கு இதெல்லாம் ஏன் நடந்தது? "என்று வேதனையுடன் பேசியுள்ளார் நடிகர் ஆதவன்.

Recommended Video

Vadivel Balaji பார்த்த பிறகு எனக்கு தூக்கமே வரல | Tamil Filmibeat
பணம் பறிப்பதில் குறி

பணம் பறிப்பதில் குறி

நடிகர் ஆதவன் வெளியிட்டுள்ள இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வடிவேல் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் பணம் பறிப்பதிலேயே குறியாக இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X