பிறப்பு இறப்பு.. நடுவுல கொஞ்சம் கேப்... சந்தோஷமா இருங்க.. தீயாய் பரவும் வடிவேல் பாலாஜியின் வீடியோ!
சென்னை: நடிகர் வடிவேல் பாலாஜி மரணமடைந்த நிலையில் அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
சின்னத்திரை நடிகரான வடிவேல் பாலாஜி கலக்கப்போவது யாரு, அது இது எது, ஜோடி நம்பர் ஒன் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வைகைப் புயல் வடிவேல் போன்ற உடல் மொழியில் ரசிகர்களை கவர்ந்த வடிவேல் பாலாஜி, பெண் கெட்டப்புகளிலும் கலக்கியிருக்கிறார்.

அஞ்சலி
கடந்த 2 வாரங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் கண்ணீர் அஞ்சலியுடன் இறுதி மரியாதை செலுத்தினர்.

எதை கொண்டுவந்தாய்?
இந்நிலையில் நடிகர் வடிவேல் பாலாஜி வெளியிட்ட அவரது வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது. அதில் பகவத் கீதை இடம்பெற்றுள்ள எதை நீ கொண்டு வந்தாய் கொண்டு செல்வதற்கு என்று கூறி இதுதான் உண்மை வரும்போது என்ன எதை எடுத்து வந்தோம் போகும் போது எடுத்து செல்வதற்கு?

நடுவுல கொஞ்சம் கேப்பு
பிறப்பு இறப்பு நடுவுல கொஞ்சம் கேப்.. அந்த கேப்புல சந்தோஷமா இருங்க.. அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பாருங்க.. இதுல என்ன நீ பெரிய ஆளு, நான் பெரிய ஆளு.. என தனக்கே உரிய புன்னகையில் பேசி முடித்திருக்கிறார் வடிவேல் பாலாஜி.

பலரும் பகிர்ந்து..
தற்போது வடிவேல் பாலாஜி காலமாகியுள்ள நிலையில் அவரது இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் ரோபோ ஷங்கரும் இந்த வீடியோவை வெளியிட்டு ஆழ்ந்த இரங்கல் வடிவேல் பாலாஜி என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த பலரும் மிஸ் யூ என்றும் ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











