twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வடிவேலு பேச மறுத்த ஜெ.வைத் தாக்கும் வசனம் நீக்கம்! வீரண்ணா படத்தில் ஜெயலலிதாவை தாக்குவது போல அமைக்கப்பட்டிருந்த வசனத்தை நடிகர் வடிவேலு பேச மறுத்ததைதொடர்ந்து படத்திலிருந்து அந்த வசனம் நீக்கப்பட்டது. நடிகர் நெப்போலியன் வீரண்ணா என்ற படத்தில் நடித்து வருகிறார். கலாநிதி என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் தந்தை, மகன்என இரட்டை வேடங்களில் அவர் தோன்றுகிறார். மகன் வேடத்தில் நடிக்கும் நெப்போலியனுக்கு நண்பராக நகைச்சுவைநடிகர் வடிவேலு நடிக்கிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன் ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்தது.அதில் காட்சிப்படி நகராட்சித் தலைவியான "செம்மீன் ஷீலாவை, நெப்போலியனும், அவரது நண்பராக நடிக்கும்வடிவேலுவும் கடுமையாக குற்றம் சாட்டிப் பேசவேண்டும். ஷீலாவைப் பார்த்து, " நீங்கள் பதவிக்கு வந்த பிறகு ஜனங்களுக்கு நிறைய பிரச்சினைகள், மின்சாரம் இல்லை, குடிக்க தண்ணீர்இல்லை, ரேஷனில் அரிசி இல்லை என்று வடிவேலு கூறவேண்டும். இந்த வசனத்தை இயக்குனர் கூறி முடித்ததும், அதிர்ச்சிஅடைந்தார் வடிவேலு. முதல்வர் ஜெயலலிதாவை குறி வைத்து இந்த வசனத்தை எழுதியிருப்பதாக நினைத்த அவர், அந்த வசனத்தை நான் பேச மறுத்துவிட்டார். இயக்குனர் கலாநிதி, வடிவேலுவை எவ்வளவோ சமாதானப்படுத்திய பிறகும் அதை ஏற்க மறுத்து வடிவேலுபடப்பிடிப்பிலிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.இது குறித்து வடிவேலு கூறுகையில், என்னுடன் நடிக்கும் நெப்போலியன் திமுக எம்எல்ஏவாக இருக்கிறார். இந்த சூழ்நிலையில்நான் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசுவது நல்லதல்ல. நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன்.தேவையில்லாமல் என் மீது அரசியல் சாயம் பூசப்படுவதை நான் விரும்பவில்லை. வசனத்தை மாற்றினால் தவிர நான் அந்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்றார்.இந்த விஷயத்தில் வடிவேலு மிகவும் ஸ்ட்ராங்காக இருந்ததால் வேறு வழியில்லாமல் வசனத்தை மாற்ற இயக்குனர் கலாநிதிமுடிவு செய்தார். இது குறித்து வடிவேலுவுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனால் மகிழ்ச்சியடைந்த வடிவேலு தொடர்ந்து படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

    By Staff
    |

    வீரண்ணா படத்தில் ஜெயலலிதாவை தாக்குவது போல அமைக்கப்பட்டிருந்த வசனத்தை நடிகர் வடிவேலு பேச மறுத்ததைதொடர்ந்து படத்திலிருந்து அந்த வசனம் நீக்கப்பட்டது.

    நடிகர் நெப்போலியன் வீரண்ணா என்ற படத்தில் நடித்து வருகிறார். கலாநிதி என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் தந்தை, மகன்என இரட்டை வேடங்களில் அவர் தோன்றுகிறார். மகன் வேடத்தில் நடிக்கும் நெப்போலியனுக்கு நண்பராக நகைச்சுவைநடிகர் வடிவேலு நடிக்கிறார்.

    இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன் ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்தது.

    அதில் காட்சிப்படி நகராட்சித் தலைவியான "செம்மீன் ஷீலாவை, நெப்போலியனும், அவரது நண்பராக நடிக்கும்வடிவேலுவும் கடுமையாக குற்றம் சாட்டிப் பேசவேண்டும்.

    ஷீலாவைப் பார்த்து, " நீங்கள் பதவிக்கு வந்த பிறகு ஜனங்களுக்கு நிறைய பிரச்சினைகள், மின்சாரம் இல்லை, குடிக்க தண்ணீர்இல்லை, ரேஷனில் அரிசி இல்லை என்று வடிவேலு கூறவேண்டும். இந்த வசனத்தை இயக்குனர் கூறி முடித்ததும், அதிர்ச்சிஅடைந்தார் வடிவேலு.

    முதல்வர் ஜெயலலிதாவை குறி வைத்து இந்த வசனத்தை எழுதியிருப்பதாக நினைத்த அவர், அந்த வசனத்தை நான் பேச மறுத்துவிட்டார். இயக்குனர் கலாநிதி, வடிவேலுவை எவ்வளவோ சமாதானப்படுத்திய பிறகும் அதை ஏற்க மறுத்து வடிவேலுபடப்பிடிப்பிலிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

    இது குறித்து வடிவேலு கூறுகையில், என்னுடன் நடிக்கும் நெப்போலியன் திமுக எம்எல்ஏவாக இருக்கிறார். இந்த சூழ்நிலையில்நான் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசுவது நல்லதல்ல. நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன்.

    தேவையில்லாமல் என் மீது அரசியல் சாயம் பூசப்படுவதை நான் விரும்பவில்லை. வசனத்தை மாற்றினால் தவிர நான் அந்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்றார்.

    இந்த விஷயத்தில் வடிவேலு மிகவும் ஸ்ட்ராங்காக இருந்ததால் வேறு வழியில்லாமல் வசனத்தை மாற்ற இயக்குனர் கலாநிதிமுடிவு செய்தார். இது குறித்து வடிவேலுவுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனால் மகிழ்ச்சியடைந்த வடிவேலு தொடர்ந்து படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X