திரைத் துளி
மதுர படத்தில் வடிவேலு நடிக்க மறுப்பதாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் அந்தப் படத்தின் இயக்குநர் மாதேஷ்.
தயாரிப்பாளர் ஜீ.வியின் படம் ஒன்றில் புக் ஆன வடிவேலு, அவரின் மறைவுக்குப்பின் அதற்கான அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தருமாறு ஜீ.வி. குடும்பத்தினர் கேட்டபோது கொடுக்க மறுத்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து புதிய படங்களில் நடிக்கும் முன் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்று வடிவேலுவுக்கு ரெட் கார்ட் போடப்பட்டது. இதனால் அப்செட் ஆன வடிவேலு, நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த்தின் காதுகளில் ஓதியுள்ளார்.
வடிவேலு சொன்னதைக் கேட்ட விஜயகாந்த், இது பொதுவான பிரச்சினை அல்ல, எனவே அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுக்கும் வழியைப் பார்க்குமாறு அறிவுரை கூறியுள்ளார்.
கேப்டன் கைவிட்டு விடவே கடுப்பாகிப் போன வடிவேலு கொஞ்ச நாளைக்கு புதிய படங்களில் நடிக்காமல் இருப்போம், அப்பதான் நமது அருமை தயாரிப்பாளர்களுக்குத் தெரியும் என்று முடிவெடுத்து, புக் ஆன மதுர படத்தில் நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.
கடுப்பாகிப் போன இயக்குநர் மாதேஷ், சில நாள் ஷூட்டிங் வந்து விட்டு இப்போது வடிவேலு முரண்டு பிடிப்பதாக நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளாராம்.
அதேநேரத்தில், இதுபோன்ற பிரச்சனைகளால் வாய்ப்புகள் இழந்து, புவ்வாவுக்கு லாட்டரி அடிக்கும் நிலை வந்து விடக் கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார் வடிவேலு. சென்னை சாலிகிராமம் பகுதியில் இருந்த தனது அலுவலகத்தை இடித்துவிட்டு அங்கு ஒரு டப்பிங் தியேட்டரைக் கட்டியுள்ளார்.
சொந்தப் படம் எடுத்து நஷ்டப்படாமல் கையில் உள்ள காசை பிரயோஜனமாக முதலீடு செய்யும் வடிவேலு விவரமானவர்தான்.


Click it and Unblock the Notifications











