»   »  6 ஆண்டுகள் கழித்து விஜய் படத்தில் நடிக்கும் வடிவேலு

6 ஆண்டுகள் கழித்து விஜய் படத்தில் நடிக்கும் வடிவேலு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்தில் நடிக்கிறாராம் வடிவேலு.

திரையுலகில் இருந்து தள்ளி இருந்த வைகைப் புயல் வடிவேலு விஷாலின் கத்திச் சண்டை மூலம் திரும்பி வந்தார். வடிவேலுக்காக படத்தை பெரிதும் எதிர்பார்த்து சென்றவர்கள் அவரின் திறமையை இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை என்றனர்.

Vadivelu to act with Vijay after six years

இந்நிலையில் வடிவேலு ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய்யை வைத்து அட்லீ இயக்கி வரும் விஜய் 61 படத்தில் நடிக்கிறாராம் வடிவேலு.

படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம். இது குறித்து படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,

தெறி படத்திலேயே வடிவேலு நடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த பட வாய்ப்பை அவரால் ஏற்க முடியவில்லை. விஜய் 61 படத்தில் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பெரும்பாலான காட்சிகளில் அவர் விஜய்யுடன் வருவார் என்றார். 6 ஆண்டுகள் கழித்து வடிவேலு விஜய் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vadivelu is set to act in Vijay's upcoming movie Vijay 61 being directed by Atlee.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil