மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது.. ரெட் கார்டு நீக்கப்பட்டது குறித்து..நடிகர் வடிவேலு உருக்கம்!

சென்னை: மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு என நெகிழ்ந்துள்ளார் நடிகர் வடிவேலு.

மதுரையை பூர்விகமாக கொண்ட வடிவேலு நடிகர் ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். தனது காமெடியால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் வடிவேலு.

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு கூட்டணியில் மாபெரும் வெற்றிபெற்ற இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தின் 2வது பாகத்தை இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற பெயரில் உருவாக்க திட்டமிட்டனர்.

திரைக்கதையில் மாற்றம் செய்யக்கோரி

திரைக்கதையில் மாற்றம் செய்யக்கோரி

படத்தின் பணிகள் துவங்கியது முதலே இயக்குனர் சிம்புதேவனுக்கும் வடிவேலுவுக்கும் இடையே படத்தின் கதை தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. சிம்புதேவன் சொன்ன காட்சிகளில் வடிவேலுவுக்கு சம்மதம் இல்லாததால் தொடர்ந்து படத்தின் திரைக்கதையில் மாற்றம் செய்யுமாறு வடிவேலு கூறியதாகவும் தகவல் வெளியானது.

படப்பிடிப்பில் பங்கேற்காத வடிவேலு

படப்பிடிப்பில் பங்கேற்காத வடிவேலு

இதனால் படக்குழுவுக்கும் வடிவேலுவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. மேலும் படப்பிடிப்பு தொடங்கிய பிறகும் படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்தார் வடிவேலு. கேரவன் வரை வந்த வடிவேலு படப்பிடிப்பில் பங்கேற்காமல் சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.

வாய்ப்பு இல்லாமல் இருந்த வடிவேலு

வாய்ப்பு இல்லாமல் இருந்த வடிவேலு

இதனால் தயாரிப்பாளரான ஷங்கருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட, வடிவேலு இனிமேல் நடிக்கக்கூடாது என ரெட் கார்டு பெற்றார். இதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார் வடிவேலு. இதுதொடர்பாக பலமுறை ஷங்கர் மற்றும் வடிவேலு தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

சுமூகத் தீர்வு - ரெட் கார்டு நீக்கம்

சுமூகத் தீர்வு - ரெட் கார்டு நீக்கம்

இந்நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் '23-ம் புலிகேசி 2' திரைப்படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி மேற்கண்ட பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது" என அறிவிக்கப்பட்டது.

மீண்டும் சினிமாவில் தோன்றுவது..

மீண்டும் சினிமாவில் தோன்றுவது..

இதனை தொடர்ந்து நடிகர் வடிவேலு பழையபடி மீண்டும் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் வடிவேலு ரெட் கார்டு நீக்கப்பட்டது குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு. என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள்.

நாய் சேகர் படத்தில் நடிக்க உள்ளேன்

நாய் சேகர் படத்தில் நடிக்க உள்ளேன்

ஒவ்வொரு குடும்பமும் எனக்கு ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள். என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை

நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தான். என்னை மீண்டும் திரைக்கு கொண்டுவந்ததன் மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார். சுராஜ் இயக்கும் 'நாய் சேகர்' படத்தில் செப்டம்பர் மாதம் முதல் நடிக்கவுள்ளேன்.

முதல்வரை சந்தித்ததும் நல்ல நேரம் வந்துடுச்சு

முதல்வரை சந்தித்ததும் நல்ல நேரம் வந்துடுச்சு

அதனைத் தொடர்ந்து 2 படங்களில் நாயகனாக நடித்துவிட்டு, பின்னர் காமெடியனாகவும் நடிக்கவுள்ளேன். என்னை வைத்து மீம்ஸ் போட்ட மீம் கிரியேட்டர்களுக்கு நன்றி. தமிழக முதல்வரைச் சந்தித்த பின்னர் எனக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது. மீண்டும் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவிப்பேன்" இவ்வாறு நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X