வந்துட்டான்யா.. வந்துட்டான்யா.. மீண்டும் இணைந்த பார்த்திபன் - வடிவேலு கூட்டணி.. போட்டோவே மிரட்டுதே!
சென்னை: இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க ஆரம்பித்த வடிவேலு தயாரிப்பு தரப்பிடம் பிரச்சனை செய்து பல கோடி நஷ்டமடைந்து அந்த படம் அப்படியே டிராப் ஆன நிலையில், ஷங்கர் கொடுத்த புகாரின் பேரில் வடிவேலு மீது ரெட் கார்டு போடப்பட்டது. சில ஆண்டுகள் அவர் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், லைகா தலையிட்டு அந்த பிரச்சனையை சரி செய்தது.
ஆனால், லைகா தயாரிப்பில் வடிவேலு நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் லைகாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. அந்த படத்தில் இருந்தே அந்த நிறுவனம் அடிவாங்க ஆரம்பித்து அஜித்தின் விடாமுயற்சி படம் வரை அடிவாங்கிக் கொண்டே இருப்பது தனிக்கதை.

வடிவேலுக்கு சரியான கம்பேக் படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் படம் அமைந்தது. அதன் பின்னர், வடிவேலு அடுத்தடுத்த படங்களை பார்த்து பார்த்து நடித்து வரும் நிலையில், தற்போது பார்த்திபனுடன் இணைந்துள்ளார்.
குண்டக்க மண்டக்க: எப்படி கவுண்டமணி - செந்தில் காமெடி ரசிகர்களை பல ஆண்டுகள் சிரிக்க வைத்ததோ அதே அளவுக்கு பார்த்திபன் மற்றும் வடிவேலு கூட்டணியில் வெளியான காமெடி காட்சிகள் அனைத்துமே இன்னமும் நகைச்சுவை சேனல்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்". "குண்டக்க மண்டக்க", "வந்துட்டான்யா.. வந்துட்டான்யா" என பல எபிக் காமெடிகள் ரசிகர்களின் ஃபேவரைட்களாக இன்றளவும் உள்ளன.
மீண்டும் இணைந்த கூட்டணி: சுந்தர். சி இயக்கத்தில் கேங்கர்ஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு. பிரசாந்த் உடன் இணைந்து வின்னர் 2 படத்திலும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், பார்த்திபன் மற்றும் வடிவேலு சந்திப்பு நடத்தியுள்ளனர். அதன் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வெளியிட்டுள்ளார். விரைவில் இருவரும் இணைந்து நடிக்கும் படம் வரப்போவதாக அறிவித்துள்ளனர்.
பார்த்திபன் செம ஹேப்பி: நடிகர் பார்த்திபன் காமெடி படங்களில் எல்லாம் நடிக்காமல் கடந்த சில ஆண்டுகளாகவே ஒத்த செருப்பு சைஸ் 7, இரவின் நிழல் மற்றும் டீன்ஸ் என வித்தியாசமான படங்களை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் பழைய பார்த்திபனாக காமெடி படம் ஒன்றை கொடுக்க முடிவு செய்துள்ளார். "வெற்றிக்கான தேர்தல் கூட்டணி எதுன்னு தெரியாது,ஆனா......!" என தற்போது வடிவேலுவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் வெயிட்டிங்: மீண்டும் வடிவேலு மற்றும் பார்த்திபன் இணைந்து படத்தில் நடித்தால் நல்லாத்தான் இருக்கும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பார்த்திபன் மற்றும் வடிவேலு என இருவருக்குமே கமர்ஷியல் கம்பேக் தேவைப்படும் நிலையில், சரியான கூட்டணி தான் என்று குறிப்பிட்டு வருகின்றனர். தயாரிப்பாளர் தான் இன்னமும் கிடைக்கவில்லை என்றும் கிடைத்தால் அடுத்த படத்தை ஆரம்பித்துவிட வேண்டியது தான் என பார்த்திபன் அடுத்த கொக்கியையும் அழகாக போட்டுள்ளார். எஸ்.ஜே. சூர்யாவுடனும் இணைந்து பணியாற்ற விரும்புவதாக ரசிகர்களின் கேள்விக்கு கமெண்ட் பக்கத்தில் பார்த்திபன் பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











