ஆஹா வந்துட்டான்யா வந்துட்டான்யா!.. வடிவேலுவுடன் பார்த்திபன் காம்பினேஷன்.. கண் கொள்ளா காட்சி!

சென்னை: கலைஞர் 100 விழாவில் வைகைப் புயல் வடிவேலு கலந்து கொண்ட நிலையில், பார்த்திபன் உடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. சென்னை, கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக கலைஞர் 100 விழா நேற்று நடைபெற்றது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், நயன்தாரா, சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், தனுஷ், சூர்யா, கமல் உள்ளிட்டோர் பேசிய காட்சிகளும் இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் வடிவேலு. தொடர்ந்து திமுகவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் வடிவேலு கலைஞர் 100 விழாவுக்கு வருகை தந்த நிலையில், அவர் மீது ரசிகர்கள் சிலர் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Vadivelu and Parthiban selfie goes trending fans expecting their combination soon

விஜயகாந்தை மறந்த வடிவேலு: கேப்டன் விஜயகாந்த் நடித்த சின்னக் கவுண்டர், தவசி, எங்கள் அண்ணா என பல படங்களில் வடிவேலு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே வடிவேலுவின் வளர்ச்சிக்கு கேப்டன் விஜயகாந்தும் ஒரு காரணம் என்கின்றனர். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அவர் அரசியலுக்கு வந்த நிலையில், வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் விஜயகாந்த் மறைவுக்கு கூட வரவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.

Vadivelu and Parthiban selfie goes trending fans expecting their combination soon

வடிவேலு அழுதார்: ஆனால், விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்ததும் 2 நாட்கள் சாப்பிடாமல் வடிவேலு அழுதார் என்றும் விஜயகாந்த் மீது வடிவேலு எந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார் என்பது அவருக்குத் தான் தெரியும் என்றும் வடிவேலுவின் ஆதரவாளர்கள் தகவல் தெரிவித்தனர். கலைஞர் 100 விழாவில் கலந்து கொள்ள முடிகிறது ஒரு எட்டு விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று பார்த்தால் என்ன என்றும் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவோ அல்லது ட்வீட்டோ போட்டால் கூட விமர்சனங்கள் குறையுமே என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Vadivelu and Parthiban selfie goes trending fans expecting their combination soon

பார்த்திபன் உடன் செல்ஃபி: கலைஞர் 100 விழாவில் கலந்து கொண்ட வடிவேலு நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், "நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் ? என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம். பார்க்கலாம் .... விரைவில் வந்தால்!இல்லாவிட்டாலும் பார்க்கலாம் எப்போது வந்தாலும்!!!" என பார்த்திபன் பதிவிட்டதை பார்த்த ரசிகர்கள் பழையபடி இவர்கள் காம்பினேஷனில் ஒரு படம் வந்தால் சிறப்பாக இருக்கும் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X