Maamannan: கோட் சூட்டில் வடிவேலு, உதயநிதி.. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தெறிக்கவிடும் தெருக்குரல் அறிவு!

சென்னை: சந்தோஷ் நாராயணன் மற்றும் தெருக்குரல் அறிவு இடையே மனஸ்தாபம் ஏற்பட்ட நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தெருக்குரல் அறிவுக்கு தரமான பாடல் ஒன்றை பாட கொடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி உள்ள மாமன்னன் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் 4வது சிங்கிளான மன்னா மாமன்னா பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

ஓசை.. ஓசை.. கேக்குதா என் பாஷ என தெருக்குரல் அறிவு ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடுவதே செம சூப்பராக உள்ளது.

 Vadivelu and Udhayanidhi stunning in Coat Suit and Therukural Arivu rocks in Maamannan 4th single

மாமன்னன் இசை வெளியீடு: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், வெற்றிமாறன், பா. ரஞ்சித், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட மாமன்னன் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன்னன் படத்தின் பாடல்கள் அனைத்துமே கர்ணன் படத்துக்கு அடுத்தபடியாக கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

 Vadivelu and Udhayanidhi stunning in Coat Suit and Therukural Arivu rocks in Maamannan 4th single

தேவர்மகன் இசக்கி: மாமன்னன் போஸ்டர்கள் வெளியானதுமே அப்படியே தேவர்மகன் மாதிரியே இருக்கே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தேவர்மகன் படத்தில் வந்த இசக்கியின் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்தே மாமன்னன் படத்தை தான் உருவாக்கி இருப்பதாக மாரி செல்வராஜ் உண்மையை போட்டு உடைத்து விட்டார்.

உதயநிதி ஸ்டாலினின் இறுதிப்படமாக இந்த படம் இருக்கும் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வரும் சூழலில் தற்போது ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 4வது சிங்கிளான மன்னா.. மாமன்னா பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

 Vadivelu and Udhayanidhi stunning in Coat Suit and Therukural Arivu rocks in Maamannan 4th single

தெருக்குரல் அறிவு தாறுமாறு: என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு பிறகு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பா. ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணனே பிரிந்த நிலையில், மாரி செல்வராஜும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மானிடம் சென்றுள்ளார்.

இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள இந்த பாடலை பாடி லிரிக் வீடியோவில் பர்ஃபார்ம் செய்துள்ளார் தெருக்குரல் அறிவு. அவரது குரலில் உருவாகி உள்ள அரசியல் அர்த்தமுள்ள பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.

கோட்சூட்டில் வடிவேலு, உதயநிதி: இந்த பாடல் லிரிக் வீடியோவில் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் கோட் சூட் அணிந்துக் கொண்டு செம டெரர் லுக்கில் போஸ் கொடுத்துள்ள காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விரைவில் வெளியாக உள்ள மாமன்னன் திரைப்படம் பெரிய சம்பவத்தை கண்டிப்பாக செய்யும் என எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X