விஜயகாந்த் உயிரிழந்தது தெரிந்ததும் வடிவேலு இதையாவது செஞ்சிருக்கணும்..ரஞ்சித் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: கேப்டன் என தமிழ்நாடு மக்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக டிசம்பர் 28ம் தேதி காலை 6.10 மணிக்கு மியாட் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71. விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்றதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து இருந்தார். அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சில நடிகர்கள் வர முடியாத சூழலில் வீடியோ வெளியிட்டும் ட்வீட் போட்டும் இரங்கல் தெரிவித்தனர்.

ஆனால், கடைசி வரை வைகைப்புயல் வடிவேலு இரங்கல் தெரிவிக்காதது பெரும் பஞ்சாயத்தை கிளப்பியது. பலரும் அதுதொடர்பாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்த போது அது தொடர்பாக பேசியுள்ளார்.

Vadivelu atleast mourn for Vijayakanth demise at social media told by Actor Ranjith

மாமன்னன் வடிவேலு: கடந்த ஆண்டு மாமன்னன் படத்தில் நடித்த வடிவேலுவுக்கு மிகச்சிறப்பான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. ரெட் கார்டு நீக்கப்பட்ட நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் மீண்டும் நடித்தார். ஆனால், அந்த படம் பெரிய தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் ஃபாசில் நடித்த மாமன்னன் படத்தில் டைட்டில் கதாபாத்திரத்தில் வடிவேலு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மட்டுமின்றி திரையுலக பிரபலங்களையும் வியக்க வைத்திருந்தார். மீண்டும் பகத் ஃபாசில் உடன் வடிவேலு இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திட்டும் பிரபலங்கள்: விஜயகாந்த் மறைவுக்கு ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன், இளையராஜா, ராதா ரவி உள்ளிட்ட ஏராளமான நடிகர்களும் குஷ்பு, சுகன்யா உள்ளிட்ட பல நடிகைகளும் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மன்சூர் அலி கான் எல்லாம் கடைசி வரை விஜயகாந்தின் கால்மாட்டிலேயே நின்று கிடந்ததை பார்த்து ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். ஆனால், வடிவேலு கடைசி வரை வராமல் ஒரு இரங்கல் ட்வீட் கூட போடாததை பார்த்த ரசிகர்களும் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பிரபலங்களும் வடிவேலுவை திட்டித் தீர்த்தனர்.

வடிவேலு இதையாவது செஞ்சிருக்கணும்: இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடிகர் ரஞ்சித் இந்த உலகத்தில் யாரும் நிரந்தர எதிரி கிடையாது. வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனைக்குள் நான் செல்லவில்லை. எதிரியாக இருந்தாலும் இறந்து விட்டால் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவது தான் தமிழர்களின் பழக்கம். நேரில் செல்ல முடியவில்லை என்றால் கூட ஒரு அறிக்கையாவது வடிவேலு விட்டிருக்க வேண்டும். அதையும் அவர் செய்யாதது தவறான விஷயம் என பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X