அடம் பிடிக்கும் வடிவேலு: ரெட் கார்டு கொடுக்கும் விஷால்?

By Siva

Recommended Video

வடிவேலுக்கு ரெட் கார்டு கொடுக்கும் விஷால்- வீடியோ

சென்னை: தயாரிப்பாளர் சங்கம் ஒன்று சொல்ல வடிவேலுவோ வேறு விதமாக பேசியுள்ளார். இதனால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து படப்பிடிப்பையும் துவங்கினார்கள். படப்பிடிப்பு 10 நாட்கள் நடந்த நிலையில் வடிவேலுவுக்கும், இயக்குனர் சிம்புதேவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து படப்பிடிப்பு நின்றுவிட்டது. இதை தொடர்ந்து படத்தில் இருந்து வெளியேறுவதாக வடிவேலு அறிவித்தார்.

வடிவேலு

வடிவேலு

24ம் புலிகேசி பிரச்சனை தயாரிப்பாளர் சங்கம் வரை போனது. வடிவேலுவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவரோ, தான் எந்த பிரச்சனையும் செய்யவில்லை என்றும், படப்பிடிப்பை தொடங்க தாமதம் செய்ததால் தனக்கு பொருளாதார இழப்பும், மனஉளைச்சலும் ஏற்பட்டதாகவும், அதனால் படத்தில் நடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

ஷங்கர்

ஷங்கர்

வடிவேலுவிடம் இருந்து ரூ. 9 கோடி நஷ்டஈடு வாங்கிக் கொடுக்குமாறு 24ம் புலிகேசி படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். தயாரிப்பாளர் சங்கத்தினரும் வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர் மசியவில்லை.

முடிவு

முடிவு

எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் படத்தில் நடிக்க வேண்டும் இல்லை என்றால் ரூ. 9 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிடம் தெரிவித்து ஒரு வாரம் டைம் கொடுத்தது.

ரூ. 2 கோடி

ரூ. 2 கோடி

படத்தில் மீண்டும் நடிக்க முதலில் கூடுதலாக ரூ. 1 கோடி கேட்ட வடிவேலு தற்போது ரூ. 2 கோடி கேட்டுள்ளாராம். பிடி கொடுக்காமல் பேசும் வடிவேலுவால் தயாரிப்பாளர் சங்கத்தினர் குழப்பத்தில் உள்ளார்களாம்.

ரெட் கார்டு

ரெட் கார்டு

வடிவேலு இதே போன்று அடம்பிடித்தால் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைப்பதை தவிர வேறு வழியில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X