இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? வைரலாகும் வடிவேலு பிறந்தநாள் மீம்கள்.. எல்லாமே தரமான சம்பவம்!

சென்னை: மீம்களின் கடவுள் என்றும் குலதெய்வம் என்றும் போற்றப்படும் நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

சமீப காலமாக வடிவேலு புதிய படங்களில் நடிக்கவில்லை என்றாலும், அவர் நடித்த ஏகப்பட்ட படங்களின் நகைச்சுவை காட்சிகளை மீம் க்ரியேட்டர் மூலமாக தமிழ் ரசிகர்கள் தினம் தினம் கண்டு மகிழ்கின்றனர்.

வடிவேலுவின் பிறந்தநாளை முன்னிட்டு வடிவேலுவை வைத்தே போடப்பட்டு வரும் பிறந்தநாள் மீம்கள் எல்லாம் வேறலெவல் சம்பவங்களாக உள்ளன. வாங்க பார்ப்போம்.

இன்னைக்கு என்ன நாள்

இன்னைக்கு என்ன நாள்

கருப்பு நாகேஷ் என்றும், வைகைப் புயல் வடிவேலு என்றும் அழைக்கப்படும் வடிவேலுவின் 60வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மீம் க்ரியேட்டர்கள் வடிவேலுவின் பிறந்தநாளை அவரை வைத்தே உருவாக்கப்பட்ட மீம்களை பதிவிட்டு மகத்தான கலைஞனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்னைக்கு என்ன நாள்-ன்னு தெரியுமா? சொன்னா தானடா தெரியும்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா எனும் இந்த மீம் ரசிகர்களால் அதிக லைக்குகளை அள்ளி வருகிறது.

நின்னு பேசும்

நின்னு பேசும்

தி ஒன் அண்ட் ஒன்லி காமெடி சூப்பர்ஸ்டார் வைகைப்புயல் வடிவேலு என்றும், எவ்ளோ நாள் ஆனாலும், இவரு காமெடி நின்னு பேசும் என அயன் பட டெம்பிளேட்டை போட்டு உருவாக்கி உள்ள மீம்களும், ரசிகர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. காமெடி தலைவனின் பிறந்தநாளே மீம் க்ரியேட்டர்களுக்கு பெரிய கன்டென்ட் தானே..

சிங்கம் களமிறங்கிடுச்சு

சிங்கம் களமிறங்கிடுச்சு

நகைச்சுவை மன்னன் வடிவேலு பற்றி நினைக்காமலோ, அவரது வசனத்தை சொல்லாமலோ பலருக்கும் அந்த நாள் ஓடாது.. ரொம்ப வேலை பார்த்துவிட்டால், ஷப்பா.. இப்பவே கண்ணு கட்டுதேன்னும்.. நைட் ஆனா இன்னும் ஏன் முழிச்சிகிட்டு இருக்க தூங்குடா கைப்புள்ள என்றும் வெகுஜன மக்களையே தனது வசனத்தை பேச வைத்த மேஜிக் மேன் தான் வடிவேலு.

அழவும் வைத்து விடுவார்

அழவும் வைத்து விடுவார்

வசனம் பேச வேண்டும் என தேவையில்லை வடிவேலு வந்தாலே சிரிக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவரது உடல் மொழிகளை பிரதிபலித்தே ஏகப்பட்ட பேர் பிரபலமாகி உள்ளனர். சிரிக்க வைக்க மட்டும் தான் வடிவேலுவுக்கு தெரியும் என நினைத்து விட வேண்டாம், அவரது சிறந்த நடிப்பால் பல முறை நம்மை அழவும் வைத்துள்ளார் என்பதை இந்த புகைப்படங்கள் நினைவு படுத்துகின்றன.

Recommended Video

Vikram 60 • Combo Treat | Karthick Subburaj • Chiyan Vikram, Dhruv Vikram
பர்த்டே ட்ரீட்

பர்த்டே ட்ரீட்

வடிவேலுவோட பிறந்தநாளுக்கு இப்படி சிறப்பா மீம் போட்டு செய்றோமே.. அவர் கிட்ட ட்ரீட் கேப்போமா என மீம் க்ரீயேட்டர்களும், தலைவர் வடிவேலு.. என்ன இவன் இன்னிக்கு நம்ம கிட்ட ட்ரீட் கேட்டுருவானோ என யோசிப்பது போன்றும் வச்சி செய்யப்பட்டுள்ள தரமான சம்பவங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X