Vadivelu: “நல்லா இருங்க வடிவேலு.. இனியாவது கொஞ்சம் திருந்தணும்..” ப்ளூ சட்டை மாறன் சம்பவம் லோடிங்

சென்னை: கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு அஞ்சலி செலுத்தாதது தொடர்ந்து சர்ச்சையாகிக் கொண்டே இருக்கிறது. விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தாத வடிவேலு, கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு சென்றார். அதனை நெட்டிசன்கள் வரவேற்றாலும், விஜயகாந்துக்கு இதுவரை அஞ்சலி செலுத்தாமல் இருப்பதை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

நல்லா இருங்க வடிவேலு

கேப்டன் விஜயகாந்தின் மறைவு திரையுலகம் மட்டுமின்றி தமிழக மக்களையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. சினிமா, அரசியல், பொதுவாழ்வு என அவர் சென்ற இடமெல்லாம் மாமனிதனாக வாழ்ந்துள்ளார். அவரது உதவியால் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம் இருக்கும். அவர்களில் வைகைப்புயல் வடிவேலுவும் ஒருவர். ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த வடிவேலுக்கு, விஜயகாந்த் தனது படங்களில் சான்ஸ் கொடுத்து வந்தார்.

 Vadivelu: Blue Sattai Maran trolled Vadivelu who attended the Kalaignar centenary celebrations


அதன் பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரத் தொடங்கினார் வடிவேலு. சின்ன கவுண்டர் படத்தில் நடித்த போது, வடிவேலுவிற்கு 6 செட் உடைகள் வாங்கி கொடுத்தவர் விஜயகாந்த். இப்படி ஏராளமான உதவிகள் செய்த விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு செல்லாதது கடும் சர்ச்சையானது. கடந்த மாதம் 28ம் தேதி நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார் விஜயகாந்த். முன்னதாக பல ஆண்டுகள் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையும் எடுத்து வந்தார்.

அப்போதும் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்காத வடிவேலு, அவர் மறைந்த பின்னரும் அஞ்சலி செலுத்தவில்லை. வடிவேலு நன்றி மறந்து இப்படி செய்யலாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். அதேநேரம் வடிவேலு நேரில் அஞ்சலி செலுத்த சென்றிருந்தால் விஜயகாந்த் தொண்டர்களால் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. இதற்கு பயந்துதான் வடிவேலு நேரில் செல்லவில்லை என தகவல்கள் வெளியாகின.

இதனால் பல ஆண்டுகள் சினிமாவில் நடிக்க முடியாமலும் வீட்டிலேயே முடங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன், விஜய், இளையராஜா உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வடிவேலு கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல், சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அவர்களுடன் வடிவேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இதனை நெட்டிசன்கள் விமர்சித்து வந்த நிலையில், ப்ளூ சட்டை மாறனும் ட்ரோல் செய்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், 'நல்லா இருங்க வடிவேலு’ ஒரே வரியில் சோலி முடித்துவிட்டார். இந்த பதிவில் கமெண்ட்ஸ் செய்து வரும் ரசிகர்கள், 'இனியாவது வடிவேலு திருந்தணும்... அவர் மதுரையின் அவமானம்..’ என்றெல்லாம் வசைபாடி வருகின்றனர். விஜயகாந்த், வடிவேலு இருவருமே மதுரைகாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த முடியாததால், வடிவேலு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதாகவும், அதனால் தொடர்ச்சியாக மது அருந்திவிட்டு விஜயகாந்தை நினைத்து புலம்பி வருவதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. வடிவேலுவை போல் அஜித், சிம்பு, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களும் இதுவரை விஜயகாந்த் நினைவிடம் செல்லவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X