வி.சேகரை நம்ப வைத்து கழுத்தறுத்த வடிவேலு?.. வறுமைக்கு காரணமே வைகை புயல்தானாம்.. ரொம்ப ஷாக்
சென்னை: இயக்குநர் வி.சேகர் சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான வேட்டவலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இது ஒருபக்கம் இருக்க சேகரின் ஏராளமான படங்களில் நடித்து பயனடைந்த வடிவேலு இறுதி அஞ்சலி செலுத்த வராதது பெரிய விவாதத்தை கிளப்பியிருந்தது. இந்நிலையில் சேகரின் வாழ்க்கையில் வடிவேலு ஒரு சம்பவத்தை செய்துவிட்டதாகவும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
நீங்களும் ஹீரோதான் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான வி.சேகர் குடும்ப படங்கள் எடுப்பதில் எப்போதுமே தனி கெத்து காண்பித்தவர். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, விரலுக்கேத்த வீக்கம், பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், பொங்கலோ பொங்கல் என ஏராளமான படங்களை இயக்கியிருக்கிறார். அவரது படங்கள் அனைத்துமே மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்வியலை எதார்த்தம் மீறாமல் பிரதிபலித்தன.
பெண் கதாபாத்திரங்கள் வலிமை: அதேபோல் ஆண்கள்தான் குடும்பத்துக்கு வலிமையானவர்கள் என்று அப்போது வந்துகொண்டிருந்த சினிமாக்களுக்கு மத்தியில்; ஒரு குடும்பத்தை தாங்குவதும், சரியான முடிவுகள் எடுப்பதும் பெண்கள் மட்டும்தான் என்பதை ஆணித்தரமாக தனது படைப்புக்களில் கூறியவர் சேகர். அதேபோல் தன்னுடைய படங்களில் ஏராளமான முற்போக்கு கருத்துக்களையும் வைத்தவர்.

தயாரிப்பாளர் சேகர்: இயக்குநராக வரிசையாக வெற்றிகளை பார்த்த அவருக்கு தயாரிப்பு ஆசையும் வந்தது. சரத்குமாரை வைத்து ஏய் உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தாலும்; இந்தப் பாதை சேகருக்கு சுலபமாக் இருந்திடவில்லை. தனது மகன் காரல் மார்க்ஸை வைத்து தயாரித்த சரவண பொய்கை படமும் பெரிய பிரச்னையையும், நெருக்கடியையும் அவருக்கு கொடுத்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான் சில நாட்களுக்கு முன்பு குளியலறையில் மயங்கி விழுந்ததாக தெரிகிறது.
உயிரிழப்பு: அப்படி விழுந்தபோது தலையில் அடிபட்டு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. உடனடியாக போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். திரைத்துறையிலிருந்து பெரும்பாலானோர் நேரில் வந்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் அவரது ஏராளமான படங்களில் நடித்து பயனும், புகழும் அடைந்த வடிவேலு நேரிலும் வரவில்லை; இரங்கல் தெரிவித்து ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. வடிவேலுவின் இதுபோன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொண்டு அவரது இமேஜை டேமேஜ் ஆக்கிவருகின்றன.
சுபைர் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சுபைர் வி.சேகர் மற்றும் வடிவேலு பற்றி தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் அவர், "தனது மகன் காரல் மார்க்ஸை வைத்து முதலில் ஒரு படத்தை தயாரித்தார். அவருக்கு நெருக்கடியை கொடுத்துவிட்டது. அதனையடுத்து இன்னொரு படம் தயாரிக்க முடிவு செய்து வடிவேலுவிடம் சென்று பேசினார். வடிவேலுவும், 'நீங்கள் வேலைகளை ஆரம்பியுங்கள். நடிக்கிறேன்' என்று உறுதி கொடுத்தார்.
ஆனால் வேலைகளை ஆரம்பித்த பிறகு தேதிகள் கொடுப்பதில் இழுத்தடித்துவிட்டார். இதன் காரணமாக சேகருக்கு பல விதங்களிலிருந்தும் நெருக்கடி வந்துவிட்டது. கடன்காரர்கள் எல்லாம் ஓவர் நெருக்கடி. சேர்த்து வைத்திருந்த அத்தனையும் போய்விட்டது. சேகரோ வறுமைக்கு சென்றுவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











