தலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு.. ஃபேஸ் ஆப்பில் வடிவேலுவையும் விட்டு வைக்கல.. எவ்ளோ க்யூட்!

சென்னை: பிரபலங்களை குழந்தைகளாக மாற்றுவது போல ஃபேஸ் ஆப்பில் ரசிகர்கள் தங்கள் கைவரிசையை காட்டி விளையாடி வருகின்றனர்.

தளபதி விஜய், சூர்யா, சிம்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சமந்தா, காஜல் அகர்வால் போட்டோக்கள் டிரெண்டான நிலையில், தலைவன் வடிவேலுவையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

மீம் போட வேண்டுமென்றாலே வடிவேலுவை நாடும் நெட்டிசன்கள், ஃபேஸ் ஆப்பில் மட்டும் அவரை விட்டு விடுவார்களா?

அப்பவே அப்படி

அப்பவே அப்படி

எந்தவொரு விஷயத்தையும் வைகைப் புயல் வடிவேலுவின் பட டெம்பிளேட்களை வைத்து மீமாக போட்டு வருகின்றனர் மீம் கிரியேட்டர்கள். அந்த அளவுக்கு ஏகப்பட்ட வெரைட்டிகளில் வடிவேலுவும் நடித்துத் தள்ளி உள்ளார். மீம் கிரியேட்டர்களின் குலசாமியாக இருக்கும் வடிவேலு, ஃபேஸ் ஆப் வருவதற்கு முன்னாடியே அதனை பயன்படுத்தி உள்ளார் என இந்த மீமை போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

பெண்ணாக

பெண்ணாக

சமீபத்தில், ஆண் நடிகர்களை பெண்களாகவும், நடிகைகளை ஆண்களாகவும் மாற்றி பண்ணப் பட்ட ஃபேஸ் ஆப் வேற லெவலில் டிரெண்ட் ஆனது. அப்போது நடிகர் வடிவேலு பெண்ணாக இருந்தால் எப்படி இருப்பார் என எடிட் செய்யப்பட்ட ஃபேஸ் ஆப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் குபீரென சிரிப்பை உண்டாக்கும் அளவுக்கு கலக்கோ கலக்கு என கலக்கியது.

சமீபத்திய டிரெண்டிங்

சமீபத்திய டிரெண்டிங்

இந்நிலையில், சமீப காலமாக பிரபலங்களை குழந்தைகளாக மாற்றும் ஃபேஸ் ஆப் எடிட் டிரெண்டாகி வருகிறது. தளபதி விஜய், சூர்யா, சிம்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரைசா வில்சன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்களின் போட்டோக்கள் செம க்யூட்டாக எடிட் செய்யப்பட்டு வைரலாகி வருகின்றன.

தலைவனை விட்டுவிடுவார்களா

தலைவனை விட்டுவிடுவார்களா

தற்போது டிரெண்டாகி வரும் அதில் மட்டும் நம்ம தலைவன் சூணா பாணாவை விட்டு விடுவார்களா என்ன? மற்ற பிரபலங்களை எல்லாம் ஓவர் டேக் பண்ணிவிட்டு, குறும்புத்தனம் மாறாத குழந்தையாக இருக்கும் வடிவேலுவின் வித விதமான ஃபேஸ் ஆப் புகைப்படங்கள் எல்லாம் வரிசையாக எடிட் செய்யப்பட்டு வெளியாகி வெறித்தனமாக வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மீண்டும் பழைய வைகைப் புயலாக சினிமாவில் ஒரு சூறாவளியை உண்டு பண்ண வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். பேய் மாமா படத்தில் வடிவேலு நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான போது சந்தோஷப்பட்ட ரசிகர்கள், அந்த படத்திலும் அவர் நீக்கப்பட்டு யோகி பாபு நடித்து வருவதால், எப்போ தான் தல கோதாவில் இறங்குவ என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X