ஆஹா.. வடிவேலுவோட "கூடை பாவாடை"யை ஆட்டையைப் போட்டு ஆஸ்கர் வாங்கிய ஜாக்கி!

சென்னை: ஆஹா.. இது அதுல்ல என்று ஒரு படத்தில் வடிவேலு டயலாக் பேசுவார்.. கடைசியில் அந்தப் படத்தில் வடிவேலு போட்ட ஒரு காஸ்ட்யூம் டிசைனை சுட்டு ஆஸ்கர் விருது வேறு வாங்கி விட்டார்கள் ஹாலிவுட்டில்.

ஆக மொத்தம் 2 டுமீல் இந்த வருட ஆஸ்கரில்.. முதல் டுமீல் என்னவென்றால் விஜய் நடித்த மின்சாரக் கண்ணா படத்தின் கதையை அப்படியே உல்டாவாக்கி எடுக்கப்பட்ட பாராசைட் படம். அடுத்த டுமீல்தான் இந்த வடிவேலு காஸ்ட்யூம்.

அது என்ன அப்படியாப்பட்ட வடிவேலு காஸ்ட்யூம்ய்யான்னு நீங்க வடிவேலு ஸ்டைலில் என் கிட்ட கேட்பது காதில் விழுகிறது. அதை விவரிப்பதை விட காட்சியாக பார்த்து ரசிப்பதுதான் செம பொருத்தமாக இருக்கும். வாங்க மேட்டருக்குப் போலாம்!

கோவில் ஹரி

கோவில் ஹரி

ஹரி இயக்கிய படங்களிலேயே வன்முறை, கத்தி, அரிவாள், கடப்பாரை, டாடா சுமோக்கள், லாரிகள் சற்று குறைவாக இருந்த படம் என்றால் அதில் ஒன்று கோவில் தான். நல்ல கதை, தரமான காமெடி, அழகான நடிப்பு, அருமையான இசை என படமே பக்காவாக இருக்கும் . அந்தப் படத்தில் வடிவேலு செய்த அதகள காமெடிகளை இன்று நினைத்தாலும் வயிறு தானாகவே குலுங்கி அமரும்.

நாய் கடித்து

நாய் கடித்து

அப்படி அவர் செய்த காமெடிகளில் ஒன்றுதான் இந்த "கூடை பாவாடை" காஸ்ட்யூம்!.. நாயுடன் வாயாடி அந்த நாய் காண்டாகி அது கடித்து வடிவேலுவை காயப்படுத்தி விடும். இதனால் அவர் கோழியை அடைத்து வைக்கப் பயன்படுத்தும் கூடையை அப்படியே காஸ்ட்யூமாக்கி போட்டு உலா வருவார் இந்தப் படத்தில். கூடவே விசிறி விடுவதற்கு வேப்பிலை கட்டு வேற!

ஆஸ்கர் விருதுகள்

ஆஸ்கர் விருதுகள்

இந்த காமெடி காட்சி படத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கட்...! அப்படியே ஆஸ்கர் விருது விழாவுக்கு வர்றோம்.. சிறந்த காஸ்ட்யூம் டிசைனருக்கான விருதைப் பெறுகிறார் ஜாக்குலின் துர்ரன். எந்தப் படத்துக்கு என்றால் கடந்த வருடம் வெளியான லிட்டில் வுமன் என்ற படத்துக்காக. எம்மா வாட்சன் போன்ற பெரும் தலைகள் நடித்த படம்.

சிறந்த உடை வடிவமைப்பு

சிறந்த உடை வடிவமைப்பு

இந்தப் படத்தில் காஸ்ட்யூம் செமையாக பேசப்பட்டது. சாய்ரோஸ் ரோன், புளோரன்ஸ் பக் போட்டு வந்த டிரஸ் எல்லாமே செம கிளாஸாக இருந்தவை.. நிற்க.. புளோரன்ஸைப் பற்றித்தான் இப்பப் பேசப் போறோம்.. புளரோன்ஸ் இந்தப் படத்தில் போட்டு வந்த டிரஸ்தான் நம்ம கண்ணைக் கவர்ந்துள்ளது. அதாவது அவர் போட்ட டிரஸ்ஸும், நம்ம வடிவேலு போட்ட கூடை பாவாடையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கு.

இது அதுல்ல!

இது அதுல்ல!

இரண்டு படத்தையும் பக்கத்தில் பக்கத்தில் வச்சுப் பார்த்தா ஆஹா.. இது அதுல்ல என்று தானாகவே வாய் ஓபனாகி வாய்ஸ் வெளியில் வருவதை உணர முடியும். என்ன ஒரு வித்தியாசம் என்றால்.. வடிவேலு கூடையை வெளியில் தெரியும் படி போட்டிருப்பார்.. புளோரன்ஸுக்கு கூடையை உள்ளே வைத்து வெளியில் துணியால் மூடியது போல இருக்கு.. வேற பெருசா வித்தியாசம் இல்லை! இந்தப் படத்தை வைத்து சமூக வலைதளத்தில் கம்பேர் பண்ணி கலாய்த்துக் கொண்டுள்ளனர் மக்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X