வைபிங் வித் வைகைப் புயல்.. கல்லூரி மாணவர்களுடன் என்னவொரு குத்தாட்டம்.. டிரெண்டாகும் வீடியோ!
சென்னை: வைகைப் புயல் வடிவேலு கல்லூரி மாணவர்களுடன் நடனமாடிய வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
இளைஞர்கள் பலரும் வடிவேலுவின் இந்த நடனத்தை பார்த்து வைபிங் செய்து வருகின்றனர்.
"எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும்" பாடலை பாடி நடனமாடி அசத்தி உள்ளார் வடிவேலு.

வடிவேலு ராஜ்ஜியம்
மீண்டும் தமிழ் சினிமாவில் வடிவேலுவின் ராஜ்ஜியம் தொடங்க ஆரம்பித்துள்ளது. நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரிட்டர்ன் ஆக உள்ள வடிவேலு, உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன், சந்திரமுகி 2 அடுத்து விஜய்சேதுபதி படம் என வரிசை கட்டி நடித்து ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னே மாமன்னன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுடன் குத்தாட்டம்
இந்நிலையில், தனியார் கல்லூரி விழாவுக்கு சென்ற நடிகர் வடிவேலு மேடையில் மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. பாட்டுப் பாடி, ஆட்டம் போட்டு ரசிகர்களை சந்தோஷக் கடலில் ஆழ்த்தி உள்ளார் வடிவேலு.

எட்டணா இருந்தா
எல்லாமே என் ராசா தான் படத்தில் இளையராஜா இசையில் வடிவேலு பாட்டுப் பாடி நடனமாடிய "எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும்.. பத்தணா இருந்தா பத்தூரும் எம்பாட்ட பாடும்" பாடலை அதே கம்பீரக் குரலுடன் பாடி மாணவர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளார் வடிவேலு.

வைப் செய்யும் ரசிகர்கள்
வடிவேலுவின் இந்த நடன வீடியோ தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களும் வடிவேலுவுடன் இணைந்து வைப் செய்து வருகின்றனர். தலைவா டாப் டக்கரு என கமெண்ட்டுகளும் தெறிக்கின்றன.

போண்டா மணிக்கு உதவ கோரிக்கை
வடிவேலு சினிமாவில் மீண்டும் பிசியாக நடித்து வரும் நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கஷ்டப்பட்டு வரும் போண்டா மணிக்கு உதவுவேன் எனக் கூறியிருந்தார். விஜய்சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் தலா ஒரு லட்சம் பணம் கொடுத்து உதவிய நிலையில், வடிவேலு விரைவில் போண்டா மணிக்கு உதவ வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











