வடிவேலு அந்த சீன்ல நடிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாரு.. கடைசியில் சமாதானம்

சென்னை : இயக்குனராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார் சுந்தர் சி

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான பல படங்களில் வடிவேலுவின் காமெடி மிகப் பிரபலமாக இருக்கும்

அந்த வகையில் கிரி படத்தில் இடம்பெற்ற பெற்ற சூப்பர் ஹிட் காமெடி ஒன்றில் வடிவேலு நடிக்க மாட்டேன் என அடம் பிடித்ததாக சுந்தர் சி கூறியுள்ளார்.

கமர்சியல் பார்முலாவில்

கமர்சியல் பார்முலாவில்

தனக்கென தனி ஸ்டைலை அமைத்துக் கொண்டு தொடர்ந்து காமெடி கலந்த கமர்சியல் பார்முலாவில் படங்களை கொடுத்து வந்தவர் இயக்குனர் சுந்தர் சி. முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சுந்தர் சி அதைத்தொடர்ந்து முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகிராமன், நாம் இருவர் நமக்கு இருவர்,உன்னைத்தேடி,உனக்காக எல்லாம் உனக்காக,உள்ளம் கொள்ளை போகுதே, அன்பே சிவம், வின்னர்,கிரி என எக்கச் சக்கமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்

தலைநகரம் பாகம் 2

தலைநகரம் பாகம் 2

தலைநகரம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சுந்தர் சி இப்பொழுது தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். சுந்தர் சி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டடித்த வருகிறது அந்த வகையில் தலைநகரம் பாகம் இரண்டில் தற்போது நடித்து வருகிறார் இதனை இயக்குனர் வி இசட் துரை இயக்கி வருகிறார்.

வெற்றி பெறவில்லை

வெற்றி பெறவில்லை

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான அரண்மனை 3 எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் ஜீவா, ஜெய் மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்படாத சூழ்நிலையில் இப்படம் கலகலப்பு 3ஆம் பாகமாக இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கிரி

கிரி

தனது ஒவ்வொரு படங்களிலும் சுவாரஸ்யமான அனுபவங்கள் பற்றி பகிர்ந்து வரும் சுந்தர் சி, கிரி படத்தில் வடிவேலுடன் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார். அர்ஜுன் நடிப்பில் வெளியான கிரி மாபெரும் வெற்றி பெற்றது இந்த படத்தில் வடிவேலு காமெடியனாக வீரபாகு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Recommended Video

Ammu Abhirami Exclusive | Cooku with Comali Contestant ஆனதுக்கு காரணம் ? | Filmibeat Tamil
அக்கா காமெடியில் நடிக்க மாட்டேன்

அக்கா காமெடியில் நடிக்க மாட்டேன்

அர்ஜுன் மற்றும் வடிவேலுவின் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கும். இதில் இடம்பெறும் வடிவேலுவின் காமெடி அனைத்தும் மிகப் பிரபலமாக பேசப்பட்டது குறிப்பாக அக்காவை வைத்து பேக்கரி வாங்கிய காமெடி அனைவரையும் ரசிக்க வைத்தது. ஆனால் அந்த காமெடியில் முதலில் வடிவேலு நடிக்கவே மாட்டேன் என்று கூறினாராம். பின் ஒரு வழியாக சுந்தர் சி அவரை சமாதானப்படுத்தி அக்கா காமெடியில் நடிக்க வைத்த சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X