சூரியை தொடர்ந்து வெள்ள நிவாரணத்துக்கு வடிவேலு நன்கொடை.. எத்தனை லட்சம் கொடுத்தாரு தெரியுமா?

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. மேலும், சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என பலரும் வெள்ள நிவாரணத்துக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

மக்கள் கஷ்டப்படுவதை பார்த்து முதல் ஆளாக நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 10 லட்சம் நன்கொடை வழங்கினர். அவர்களை தொடர்ந்து பார்க்கிங் படத்தின் வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் ஹரிஷ் கல்யாண் 1 லட்சம் நன்கொடை வழங்கினார்.

Vadivelu donates 6 lakhs to Michaung flood relief CM Fund

சமீபத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் மற்றும் சூரி என வரிசையாக நடிகர்கள் தலா 10 லட்சம் ரூபாயை நன்கொடையாக சென்னை மக்கள் துயர் துடைக்க வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வைகைப்புயல் வடிவேலு நன்கொடை வழங்கி உள்ளார்.

வடிவேலு நன்கொடை: "மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், அரசின் மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்." என உதயநிதி ஸ்டாலினை போட்டோவை ஷேர் செய்து ட்வீட் போட்டுள்ளார். மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மகனாக உதயநிதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சூரியை தொடர்ந்து: சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஷ்ணு விஷாலும், சூரியை தொடர்ந்து தற்போது வடிவேலுவும் நன்கொடை வழங்கி உள்ளனர். நடிகர் சூரி 10 லட்சம் வழங்கிய நிலையில், வடிவேலு 6 லட்சம் வழங்கி உள்ளார். இன்னமும் சில முன்னணி நடிகர்கள் அமைதி காத்து வருவது ஏன் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். சில முன்னணி நடிகர்கள் அரசு நிவாரண நிதிக்கு பணம் கொடுக்காமல் சொந்தமாக அவர்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை நேரடியாக தங்கள் ரசிகர்கள் மூலமாகவே செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கேபிஒய் பாலா எல்லாம் தன்னிடம் உள்ள அத்தனை சேமிப்பையும் அப்படியே கொடுத்து உதவுவதாக கூறியுள்ளார். முதலில் 2 லட்சமும் அடுத்து 3 லட்ச அளவிலான உதவிகளையும் அவர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X